பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாண்டியர்

கொண்ட புருடராகம், தேன் துளிபோலும் தோற்ற முடைய வயிரிேயம், தெளிந்த இருள் போலும் நீலம், மஞ்ச ளும், சிவப்பும் மாறி மாறிக் காட்டும் கோமேதகம், காற் றேறு முதலாம் குற்றத்தின் நீங்கி, வெள்ளி அங்காாகன் போல் வெண்மையும், செம்மையும் காட்டும் முத்து, கருப் பத்தே துளைப்படல் முதலாம் மூவகைக் குற்றத்தின் நீங்கிய பவளம், ஆய நவமணிகள் ஒருபால் விற்கப்படும், (சிலம்பு, கச : 6-99-2.00).

சாதரூபம், கிளிச்சிறை, ஆ.கம், சாம்பூருதம் எனும் நால்வகைப் பொன்களுள், இன்னது, ஈண்டுளது எனக் கொடிகட்டிக் காட்டி விற்கும் பொன்வணிகர் ஒருபரல் இருந்து தொழில்புரிவர் :

'சாத ரூபம், கிளிச்சிறை, ஆடகம்,

சாம்பூ தமென ஒங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் கலங்களுர் ஒழித்து ஆங்கு இலங்கு கொடி எடுக்கும் கலங்கிளர் வீதி.”

(சிலம்பு, கச : உ0க-ச)

பருத்தி நூலிலும், எலி மயிரினும், பட்டு நாலினும் வகைக்கு நாறென வகை வகையாக நெய்யப்பெற்ற ஆடை வகைகளை அடுக்கிவைத்து விற்கும் வணிகர் ஒருபால் இருந்து தொழில் புரிவர் :

'நூலினும், மயிரினும், நுழைநூற் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னு றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும்.”

- (சிலம்பு, கச : உ0இ-எ) மணம்மிகு மலர்களைப் பூந்தட்டிலே இட்டுவைத்து விற்பர் சிலர் ; ஒன்றற்கொன்று மாறுபட்ட மலர்மாலை களே விரித்துவைத்து விற்பார் சிலர் ; பொன்னும் நவமணி யும், சந்தனமும், கற்பூரமும் முதலாம் பொருள்களைப் புழுகிலும், பனிநீரிலும் நனேயவைத்து இடித்த பன்னிறச் சுண் ணங்களே விற்பார் சிலர் ; பாக்கும், வெற்றிலையும், சங்கு சுட்ட சுண்ணும்பும் விற்பார் சிலர் ;