பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 11

'பிடகைப் பெய்த கமழ்ாறும் பூவினர் ,

பலவகை விரித்த எதிர்பூங் கோதையர் : பலர்தொகுபு இடித்த காதுகு சுண்ணத்தர் , தகைசெய் தீஞ்சேற்று இன்னிர்ப் பசுங்காய், கீடுகொடி இலேயினர் : கோடுகடு நூற்றினர்.”

(மதுாைக்காஞ்சி ; உகஎ-ச0க)

இவ்வாறு பல்வேறு வாணிகம் புரிவோர், மலையிலும், கிலத்திலும், நீரிலும், பிற இடத்திலும் உண்டாய பொருள் களே எல்லாம் ஒருங்கு தொகுத்து, வைத்துக்கொண்டு, அவற்றிற்கு ஈடாக, பல்வேறு மணிகளையும், முத்துக்களே பும், பொன்னேயும் விலையாகக்கொண்டுவிற்றுப் பொருள் குவிப்பர் :

'மலேயவும், சிலத்தவும், ரேவும் பிறவும்

பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்ார்.”

(மதுரைக்காஞ்சி : இoச-சு)

மதுரை மாநகர், இவ்வாறு மாகி திபெற்ற பெரு நகரா தலின், ஆண்டு அப் பொருளைக் கவரும் கருத்துட்ையாய கள்வர் பலர் வாழ்தலும் கூடும் ; ஆகவே, அவரை அறிந்து ஒறுக்கத்தக்க ஊர்க்காவலர் பலரையும் கொண்டிருந்தது அப் பேரூர்; பொருள்களைக் கவரும் கருத்துடையராய் விழித்தகண் இமைக்குமளவில் மறையும் கள்வர் ஒதுங்கும் இடத்தைக், களிற்றிரை தேடித்திரியும் கொடும்புலிபோல் அறிந்துகொள்ளவல்ல காவலர் பலர் அந் நகர்க்கண் வாழ்ந்திருந்தனர்; அன்னர், துயில் மறந்த கண்னுடை யார்; அஞ்சாமை கின்ற உளம் உடையவர்; அத் தொழில் வல்லார் புகழ்ந்த ஆண்மையுடையவர் ; களவு நூலிலும், காப்பு தாலிலும் தேர்ந்த அறிவுடையவர் ; குறி கவருது அம்பெய்யும் ஆற்றல் உடையவர் ; மழைபெய்யும் கள்ளிர விலும், மடிந்திராது பணிபுரியும் மாண்புடையவர் ; இத் தகையார் காவல் உண்மையால், களவு இன்றிச் சிறந்த காவலையுடைத்து மதுரை மாநகர் :