பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அண்டர்மகன் குறுவழுதியார்

தமிழரசர் மூவருள், சோரைக் குறிக்க, இரும்பொறை, கோதை, குட்டுவன், ஆதன் முதலாய பெயர்கள் வழங்குவ தைப் போலவும், சோழரைக் குறிக்க, கிள்ளி, சென்னி, வளவன் முதலாய பெயர்கள் வழங்குவதைப் போலவும், பாண்டியரைக் குறிக்கும் பெயர்களாக, செழியன், மாறன், வழுதி முதலாய பெயர்கள் வழங்கும். ஆகவே, வழுதியார் எனும் பெயர்பூண்டு விளங்கும் இவர்,பாண்டியர் வழிவந்தவ ராவர் என்பது முடிபாம். குறுவழுதியார் எனும் பெய ருடையார், பிறிதொருவரும் உளராகவே, அவரின் வேறு அறிதற்கு, இவர் அண்டர் மகன் குறுவழுதியார் என, அழைக்கப் பெற்றுளார்; அண்டர் என்பது ஆயரைக் குறிக்க வரும் பெயாம். ' அண்டர் மகளிர் கண் தழை உடீஇயர், மரம் செல மிதித்த மாஅல்’ (அகம்: டுக.) 'அண்டர் பல்லா பயந்த கெய்” (குறுங் : உகo) என்புழி அண்டர், அப் பொருட்டாகல் அறிக. ஆயர்குடி, பாண்டி யர் குடியோடு ஒப்பத்தோன்றிய பழமையும், பெருமையும் உடையது என்க் கூறுவர் சோழன் நல்லுருத்திரனர் : * புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்னிட, வலியினுன் வணக்கிய வாடச் சீர்த்தென்னவன், தொல் லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர் ” (முல்லைக் கலி : ச.) அவ்வுறவுடைமையால் போலும், இவர் அண்டர்மகன் குறுவழுதியார் என அழைக்கப் பெற்று ளார்; அண்டர்மகன் குறுவழுதியார் ஆண்ட நாடு இது; அவர் காலத்து வாழ்ந்த அரசர் இன் ஞர் என்ற செய்தி எதுவும் தெரிந்திலது; இவர் வரலாமுக நாம் அறியக்கூடிய தெல்லாம், அவரோர் அருந்தமிழ்ப் புலவர் என்பது மட்டுமே ; குறுக்கொகை, நெடுந்தொகை, புறநானூறு ஆகிய மூன்றினும், இவர் பெயரால் ஒவ்வொரு பாட்டு இடம் பெற்றுளது.

அாசைெருவனிடத்தில் அழகிற்சிறந்த மகளொருத்தி உளள் என அறிந்த பிற அரசர்கள், அம் மகளே மணஞ் செய்து தருமாறு வேண்டுவர்; அவ்வாசர் எவரும் தம் மக