பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடை நம்பி 17

அறிவு பொருந்தி யிருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்த வன் அறிவுடை கம்பி, ' பல கோடி செல்வத்தைக் குவித்து வைத்து, அச் செல்வத்துப் பயனும் பலரோடு இருந்து பகுத்து உண்ணும் பெருவாழ்வு பெற்ற மிகப் பெரிய செல் வர்க்கு, மக்கட்பேறு இன்ருயின், அவர்தம் பெரு வாழ்வு, பயனுடைப் பெரு வாழ்வெனப் போற்றப்படாது, பயனிலா வாழ்வெனப் பழித்தே உரைக்கப்படும்” என, மக்கட்பேற் றின் மாண்பினே மாநிலம் அறியக்கூறிய அறிவுடை கம்பி, * மெல்ல மெல்ல அடி வைத்துக் குறுகக் குறுக கடந்து சென்று, தம் சிறிய கைகளைக் கலத்துள் இட்டு, உணவை எடுத்துத் தரையில் இட்டும், அதைத் தாமே தோண்டிப் பிசைந்தும், தம் வாயில் இட்டுக்கவ்வியும், தம் இருகைகளை யும் ஒருங்கிட்டுத் துழாவியும், வாரி உடலெலாம் பூசிக் கொண்டும் பெற்ருேர்க்குப் பேரின்பம் கருதலோடு, அவ் வின்பம் கண்டு மகிழும் அவர் தம் அறிவையும். மயக்கும் மக்கள் நலத்தைக் கண்ணுரக் கண்டு களிமகிழ் வெய்தியு முள்ளார்.

'படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்னும் உடைப் பெருஞ் செல்வ ராயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும் செய்யுடை அடிசில் மெய்பட விகிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.' (புறம்: 54) பெரும் புலவனும், பேரரசனுமாய்த் திகழ்ந்த பாண் டியன் அறிவுடை நம்பிபால், பிசிராந்தையார் என்ற அங் காட்டுப் புலவர் சென்றிருந்தார் ஒருநாள் ; புலவனும், புலவனும் கூடியவழி, பொருள் சிறை சொல்லாடற்குக் குறையுண்டோ பிசிமாச்தையார் புலவரே; ஆதலின் அவர் எப் பொருளேயும் விரும்புவர் ; ஆனால், அறிவுடை நம்பியோ, புலவனதலேயன்றி, ஊராளும் உரிமையுற்ற அரசனுமாவன் ; ஆகவே, அவன் அரசியல் தொடர்புடைப் பொருளையே பெரிதும் விரும்புவன். அதனல், அவர்கள்

பா-2