பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாண்டியர்

டிருந்தோணுய திதியன் என்பான், பகைவர்தம் பேராண் மையைப் புறங்கான வல்ல வில்லாண்மை யுடையான் என அவன் பாராட்டியிருத்தலை உணர்க.

பொருங்ர்,

செல்சமம் கடந்த வில்கெழு தடக்கைப்

பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்.”

(அகம்: உடு)

பூதப்பாண்டியன் பெருவீர கைலோடு, பாராட்டற் குரிய பண்புகள் பலவும் நிறைந்தவனுதல் வேண்டும்; அவன், மனேவியைப் பிரித்து வாழும் வாழ்வினை மன தான்ும் கினேயா மாண்புறு குணம் உடையனவன் ; தன் நாட்டு அறங்கூர் அவைகள், நெறி பிறழா நீர்மையவாதல் வேண்டும் எனும் நினைவுடையனுவன் ; நண்பரைப் பிரிந்து வாழும் கலனில் வாழ்வை கெஞ்சினும் கினையா கெடியோ வைன் ; குடிப்பற்றும், குலப்பற்றும் குறைவறக்கொண்ட குணக் குன்ருவன் ; பூதப்பாண்டியன்பால் பொலிவுறக் கிடக்கும், ஆற்றல், அன்பு, நட்பாடற் பண்பு, நாடாள் சிறப்பு ஆய இன்ன பல் குணங்கள் எல்லாம், அவன் பாடிய அழகிய பாட்டில், அமைந்து புலப்படுதலை, அப் பாட்டை உணர்ந்தார் அனைவரும் உணர்வர்.

பாண்டியர்க்குப் பகை வேந்தர்களாய சோனும், சோழனும், சிங்கம்போல் சினந்து, தொடங்கிய வினையை இடையில் மடங்காது முடிக்கவல்ல தம் பெரும் படையோடு தன் நாட்டின் மீது போர் தொடுக்கப் போகின்றனர் என் செய்தி கேட்ட பூதப்பாண்டியன், என்ளுேடு போரிட விரும்புவோர் வருக ! வருகின்றவர் யாவரேயாயினும், அவரைப் போர்க்களத்தே அலற அலறத் தாக்கி, அவர் களும் அவர்தம் தேர்ப்படைகளும், தோற்றுப் புறங்காட்டி ஒடுமாறு செய்கின்றேன் ; அவ்வாறு செய்யேனுயின், இதோ, என்னருகிருக்கும் என் அழகிய மனேவியை விட்டுப் பிரிவேளுகுக! திே தவருது நன்மை நிலைபெறும் என் நீதிமன்றத்தே, முறைவேண்டியும், குறை வேண்டியும்