பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாண்டியர்

முடிப்பர்; பழிதரு வழிவரும் செல்வம், உலகளவு உயர்ந்த மிகப்பெருஞ் செல்வமாயினும், அதைக் கொள்ள உள் ளத் தான்ும் உள்ளார்; இடுக்கண்கள் பல அடுக்கிவரினும், கண்டு கலங்காத் திண்ணியராவர்; கூறிய இக்குணங்களைக் குறை வறப் பெற்று மாண் புற்றதோடு எச்செயல் புரியிலும், தன்னலம் கருதிச்செய்யாது, இதனுல் உலகிற்கு என்ன பயன் என்று எண்ணி, உலகநலம் கருதியே செய்யும் சிறப் புடையாாவர்; இக்குணங்களுள் ஒன்றுங்குறையாமல் அனைத் தும் பொருந்தியவரே உயர்பெரும் பெரியார்' எனப் பெரியார்ப் பண்புாைக்கும் வழுதி சொற்கள், உண்மையில் இவரே பெரியார்; ஒப்புயர்வற்ற பெரியார், இளம்பெருவழுதி என்ற பாராட்டிற் குரிய பெரியார்” என்பதை உறுதி செய்து கிற்றல் காண்க!

'உண்டாலம்ம! இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிதெனத் தமியர் உண்டலும் இவரே ; முனிவிலர்; துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழிவனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய சாகித் தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுகர் உண்மையானே.’ (புறம்: க.அ.உ)

திருமால், கண்ணனும், பலதேவனும் ஆய இருவேறு உருக்கொண்டு, சொல்லும் பொருளும்போல் பிரிவின்றித் திருமாலிருங்குன்றத்தே வீற்றிருக்கும் காட்சி, கரிய நீர் கிறைந்த கடலும், வெண்ணிற மணல் பரந்த கானலும் ஒன்று கலந்து நின்முற்போலும் எனவும், பொன்னடை புனேந்து கிற்கும் திருமால் காட்சி பொன்னிற இளவெயில் சூழ்ந்து வர வளரும் இருட்காட்சியை ஒக்கும் எனவும், நீலம் மலர்ந்த சுனேயையும், அச் சுனேய்ைச் சூழ நிற்கும் பொன்னிற மலர் கிறை அசோகையும், உச்சியில், காய்களும், கனிகளும், மலர்களும் நிறைந்த வேங்கையையும் கொண்டு விளங்கும் மலை, ல்ே நிறத்தையும், பொன்ஞ்டையினையும்,