பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 41

மணிகள் இழைத்த மணி முடியினையும் உடைய திருமாலை ஒக்கும் எனவும், திருமால் காட்சியை மலையிலும், கடலிலும் மலர் நிறைக் காட்டிலும் கண்டு கண்டு களித்து, இன் புற்று, தான்் உற்ற இன்பம், உலக மக்கட்கும் உண்டாதல் வேண் ம்ெ என்ற உயர்ந்த உள்ளம் கொண்டு, உலகீர் நறு மணம் நாறும் துழாய் அணிக்கோனுய அத் திருமால் அளித்தால் அல்லது துறக்க இன்பம் கிட்டாது ; ஆகவே, விேர், மனேவியரோடும், தாய் தந்தையரோடும், மக்க ளோடும், மாபெருஞ் சுற்றத்தினரோடும் கூடிச் சென்று அவன் உறை மலையை வணங்கி வழிபடுவீராக." என, உடன் அழைக்கும் வழுதியார் செயல், அவர்தம் கடவுட் பத்தியைப் பலர் அறியத் துணைபுரிதல் காண்க !

' கடலும் கானலும் போலவும்,

புல்லிய சொல்லும் பொருளும் போலவும், எல்லாம், வேறுவேறு உருவின் ஒரு தொழில் இருவர்த் தாங்கும் நீர்நிலை ஓங்கிரும் குன்றம்.” * இளவெயில் வளாவ இருள்வளர் வெனப்

பொன்புனை உடுக்கையோன் புணர்ந்து அமர்லே.” 'கனையெலாம் நீலம் மலாச் சுனே சூழ்

சினையெலாம் செயலே மலாக் காய்கனி உறழ நனே வேங்கை ஒள்ளினர் மலா மாயோன் ஒத்த.” ' காறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை எறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்? "தைய லவரொடும், தங்தார் அவரொடும் கைம்மக வோடும், காதலவ ரொடும் தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்.”

(பரிபாடல்: கடு)