பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல. கானப்பேர் எயில்கடந்த உக்கிரப்பெருவழுதி

உக்கிாப்பெருவழுதி காலத்தே, இன்று, காளையார் கோயில் என வழங்கும் கானப்பேர் எனும் இடத்தே, வேங்கைமார்பன் என்பானுெரு பெருவீரன் வாழ்ந்திருங் தான்்; அவன், தன் காைச்சூழ, கிலவெல்லேயும் கடத்து விட்டதோ என மதிக்கத்தக்க, ஆழ்ந்த அகழியைக் தோண்டியும், வான எல்லேயையும் கடந்துவிட்டதோ எனக் கருதுமாறு உயர்ந்த மதிலை எடுத்தும் அரிய கோட்டை யொன்றை அமைத்தான்் ; அதைச் சூழ ஒளியும் நுழை யாவாறு நெருங்கிய மரங்கள் செறிந்த காவற் காட்டை வளர்த்து வைத்தான்் ; இவற்றிற்கெல்லாம் மேலாக, அவ் வாணேச் சூழச் சிற்றாண்கள் பலவற்றையும் அமைத்து வைத்தான்் ; தன் நாட்டகத்தே, இத்தகைய அரண்கள் இடம் பெறுவதோ, அவற்றை வாழ்விடமாகக் கொண்டு, தனக்கு அடங்காதார் வாழ்வதோ, கன் ஆட்சிக்குக் கேடாம் என அறிந்த உக்கிரப் பெருவழுதி, ஒரு பெரும் படையுடன் சென்று, வேங்கை மார்பனே வென்று, அக் கானேப் பேரெயிலேக் கைப்பற்றிக் கொண்டான் ; எயிலே இழந்த வேங்கை மார்பன், வறிதே இாது, அதை மீளவும் கைப்பற்ற அரும் பெரும் முயற்சிகளெல்லாம் எடுத்தப் பார்த்தான்் ; ஆனால், உக்கிாப்பெருவழுதியை வெல் வதோ, அவன் கைப்பற்றிய கோட்டையை மீட்பதோ இயலாத என்பதை உணர்ந்தான்் ; காய்ச்சிய இரும்புண்ட நீரை மீட்டலும் கூடும்: ஆனால், உக்கிரப்பெருவழுதி கைப்பற்றிய கானப்பேரெயிலை மீட்டல் இயலாது என்ப துணர்ந்து வருந்தி வறிகே மீண்டான் ; உக்கிரப்பெரு வழுதியின் பேராண்மை விளங்கும், இவ் வெற்றிச்செயலை, அவன் பெயரோடு இணைத்துப் பாராட்டினர் மக்கள் ; ஐயூர் மூலங்கிழார் எனும் புலவர், அழகிய பாவொன்று பாடிப் பாராட்டினும்:

புலவரை இறக்க புகழ்சால் தோன்றல்!

நிலவரை இறக்க குண்டுகண் அகழி,