பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாண்டியர்

தமிழ்ப்புலவரோடு இருந்து தமிழை வளர்த்தும், தமிழரசரோடிருந்து தமிழ்நாட்டு நல்வாழ்விற்குத் துணை புரிந்தும் புலவர் போற்ற வாழ்ந்த கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி தான்ும் ஒர் புலவனுவன்; தம் காலத்து மக்களிடையே காணலாம் மாண்புறு நிகழ்ச்சி களையெல்லாம், பின்னுள்ளோரும் அறிந்து, அதன் வழி ஒழுகுதல்வேண்டும் என்ற உயர் கோக்குடையாய், அவற். றைத் தம் பாவிடை அமைக்தப் பாராட்டலே புலவர் வழக்கமாம்; அதற்கேற்பவே, உக்கிாப்பெருவழுதி யாரும், தம் காலத்துத் தமிழ் மகள் ஒருக்கியின் மனநலம் விளக் கும் அழகிய பாட்டொன்றைப் பாடியுள்ளார் :

கணவன் செய்யும் எத்துணைப் பெரிய தவற்றினையும்

மறந்து மன்னிக்கும் மாண்புடையவள் தமிழ் மகள் என்ப; வள்ளுவர் கண்ட தமிழ்மகள் ஒருத்தி, எழுதுங்கால், கோல் காணுக் கண்ணேபோல் கொண்கன், பழிகாணேன் கண்ட விடத்து,” (குறள்: கஉஉடு) எனக் கூறுவது காண்க. உக்கிரப்பெருவழுதியார் அறிந்த ஒரு தமிழ்மகள், பாத் தையர் உறவுபூண்டு, பழிசிறை வாழ்வினயை தலைவன், என் மனேநோக்கி வந்தவிடத்து, அவன் தவறு கண்டு, 'அன்பிலை ; கொடியை, என்றெல்லாம் கடிந்துரைக்கக் கருதி யிருந்தேனுகவும், என் நெஞ்சம், நன்கு உழப்பெற்று உலர்ந்து புழுதியான ஒரு கிலத்தில் பெருமழை பெய்தக் கால், அப் புழுதி கரைந்து, குழைந்த போவதேபோல், அவன் செய்த பெருந்தலையளியைக் கண்டவுடனே, நெகிழ்ந்து, அவன் செய்த தவற்றினையும், என்னேயும் மறந்த அவைேடு கலந்து ஒன்றிவிட்டது," என்று கூறு கிருள் ; இத் தமிழ்மகளின் தன்னேரில்லாச் சிறப்பினைப் புலவர் உக்கிரப்பெருவழுதியார் உணர்ந்து பாடியுள்ளார்:

'வளங் கேழ் ஊானைப்

புலத்தல் கூடுமோ? தோழி!

சிறுபுறம் கவையின கை, உறுபெயல்

தண்துளிக் கேற்ற பலவுழு செஞ்செய்