பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. குறுவழுதியார்

பாண்டியர் குடியில், பெருவழுதி, குறுவழுதி என்ற பெயர்கள் பயில மேற்கொள்ளப் பெறும் , அண்டர் மகன் குறுவழுதியார் என்பாரைப்பற்றி முதற்கண் அறிந்தோம்; அவர் வேறு; இக் குறுவழுதியார் வேறு; இவர் ஆற்றற் பெருமையால், அரசியற் சிறப்பால் அறியப்பட்டவால்லர்; புலவராய்ப் புகழ்பெற்ற பாண்டிய வேந்தருள் இக் குறு வழுதியும் ஒருவர். இவர் பாடிய பாட்டொன்று நெடுக் தாகை, ம்ணிமிடைபவளத்தின் கண் இடம் பெற்றுளது.

வரையாது வந்த செல்லும் ஒரு தலைவன்பால் தலைவ! வின்னேக் காணப்பெருக் காலங்களில், தலைவி, நின்னெடு கூடி மகிழும் இடங்களாய, கழியையும், கடற் கரைச்சோலையையும் காணுந்தோறும், தலைவர் இன்று வாாார் போலும் என வாய்விட்டுக் கூறி வருந்துவள் ; வருந்துவளாயினும், கின்ைேடு பழகிய இடத்தைப் பார்ப்ப தல்ை, ஒர் அளவு கின்னேக் கண்டதேபோல் சிறிது மகிழ்ந் தவளாய்ப் பிரிவுத் துயரைப் பொறுத்திருப்பாள் ; இனி அதற்கும் இடன் இன்று ; தாய், தன் மகள் பண்டினும் பேரழகு உடையளாகல் அறிந்து, அவள் அவ்வழகோடு புறத்தே போகல், அவள் பெண்மைக்குக் கேடுண்டாதலும் கூடும் எனும் அச்சம் உடையளாய் இற்செறித்து விட்டாள்; இற்செறிக்குங்கால், அவள் தலைவியின் பேரழகு கண்டு விட்ட பெருமூச்சு, தன் மகட்கு மணவினையினை விரைந்து மேற்கோடற்கண் உள்ள அவள் உள்ளத் துடிப்பை உணர்த்துவதாகும் ; ஆகவே, வேற்றுவரைவு வந்து றுமோ என்ற அச்சமும் உட்ையளாயினுள், ஆகவே, இனி, விேர் இருவீரும் பண்டேபோல் களவில் கூடி மகிழ்தல் இயலாது; தலைவியின் கற்பும், கின் காதலும் வாழவேண்டின், வரைந்து கோடலை விரைந்து மேற்கோடல் வேண்டும்” என்று தோழி கூறிய கருத்துரை அடங்கியுளது அப் பாட்டில்

மணப்பருவம் உற்ற மகள், தன் மாண்பினைப் போற்றிக் காத்துக்கொள்ளும் ஆற்றல் உடையளர் காள். அதைப்போற்