பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி

பண்டைத் தமிழ் அரசர்கள், போர், போர், போர் என என்றும் போரே மேற்கொண்டு வாழ்ந்தனராதலின், அவருள் பலர், தங்கள் அரண்மனையிலேயே இறவாது, தாம் மேற்கொண்டு சென்ற போர்க்களங்களிலேயே இறந்தன ராவர்; அவ்வாறு இறந்தார்களைக் குறிப்பிடுங்கால், அவர் தம் இறப்பிற்குக் காரணமாய, அப்போர்க் களப் பெயர்களை, அவர் பெயரோடு இணைத்து வழங்கினர் அக்கால மக்கள். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், யானே மேல் துஞ்சிய இராசகேசரி இராசாதிாசன் என்ற பெயர்களைக் காண்க. இவ்வரசர் களைப் போன்றே, மாறன் வழுதியும் கூடகாரம் எனும் இடத்தே உயிர்நீத்தமையான், கூடகாத்துத் துஞ்சிய மாறன் வழுதி என அழைக்கப் பெற்றுளான். மாறன் வழுதி இறந்த கூடகாரம் யாண்டுளது? அவன் ஆண்டு இறப்பதற்குக் காரணமாய அவன் பகைவர் யார்? என்பன

விளங்கவில்லை.

கூடகாரத்தத் துஞ்சிய மாறன்வழுதி, ஆற்றல் மிக்க அரசனவன்; அவனேப் பாடிய புலவர் இருவரும் அவன் போர்வன்மையினேயே விதந்தோதிப் பாராட்டியுள்ளனர். அவனேப் பாராட்டிய புலவருள் ஒருவராய ஐயூர் முடவனர், "கடல்நீர் பொங்கி எழுமாயின், அதைத் தடுத்து நிறுத்த வல்ல அணையினே யாண்டும் காணல் இயலாது; அளவின்றிப் பெருகி எழுந்து கொழுந்துவிட்டெரியும் தீயால் அழிவுரு. மல், உயிர்களைக் காத்துப் பேணவல்ல இடம் உலகத்தில் எங்கும் இல்லை; பெருமலைகளையும் பெயர்த்தெறியும் போற்றல் கொண்டு சுழன்றடிக்கும் பேய்க்காற்றினத் தடுத்து நிறுத்தவல்ல ஆற்றல், உலகில் எப்பொருட்கும் இல்லை; அதைப் போன்றே, வழுதியின் சினத்தைத் தாங் கும் ஆற்றல் ஒருவர்க்கும் உண்ட்ாகாது; அவுன் வெகுளியை