பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாண்டியர்

மாறன் வழு தி, ஒருகால் வடகாட்டார் சிலர்மீது சினந்து படையெடுத்துச் சென்ருன்; சினந்த செல்லும் செழியன் காட்சி, நெடிய பெரியமலை முழையின் கண்ணே உறங்கிக் கிடங்க கன் உறக்கம் ஒழித்து எழுந்து, உறுசுவை ஊனே உண்ணவேண்டும் என்ற ஆசை உள் கின்று உந்த அவ்விரையைப் பெறுவான் வேண்டி, தான்் விரும்பிய இடம் நோக்கிச் செல்லும் சினப்புலிக் காட்சி யொத்திரும் தது. இவ்வாறு போர் வெறிகொண்டு போதரும் வழுதி யின் பகைவர் யாவர் என்பதை மக்கள் தெளிய அறியார்; ஆயினும், அவன் செல்வது வடநாடு நோக்கி என்பதை அறிவர். வடகாடு, வாழ்வும் வனப்பும் பொருந்திய வள மார் நாடு; அந்நாட்டு ஊர்தோறும் மீன்சுடுவார் எழுப்பும் புகை, புலால் மணம் கமழப் படர்ந்து எழுந்து, வயலருகே வானுற வளர்ந்து கிற்கும் மருதமரக்கோடுகளைச் சூழ்ந்து கிற்கும்; நரை திரை தோன்றி மூத்த அந்நாட்டு நல்லோர், செயல்புரி காலம் கடந்தவரர்கவே, வேறு உறுதொழில் புரியாராய்ப் பலிபெறு துண் கிற்கும் ஊர் மன்றத்தே இருந்த, வட்டிழைத்த ஆடி மகிழ்வர். இவ்வாறு வளத் தாலும், வாழ்வாலும் சிறந்த அந்நாடுகள் அழிதல் உறுதி; அந் நாட்டுவளம் குன்றும்; அக் காட்டு வாழ்வை வெறுத்து, மக்கள் வேறிடம் சென்று விடுவர்; ஊர்மன்றத்தே பலி விடல் ஒழியும்; முதியோர் இழைத்த வட்டுக்குழிகள், காட்டுக் கோழிகளின் முட்டையால் மறைப்புறும்; பகைவர் நாட்டிற்கு வர இருக்கும் இவ்வழிவுக்காட்சியைக் கண் முன் கொணர்ந்து காணும் அம்மக்கள், அவ்வடநாட்டரச ருள், அவ்வாறு கம் நாடழிய வாடப்போகும் அரசர் பாவரோ? என ஏங்கி இரங்குவாராயினர். மாறன் வழுதி வின் மாற்றருந்திறலை இவ்வாறு பாடி மகிழ்வர் மருதன் இளநாகனர் எனும் மற்றொரு புலவர் :

'அணங்குடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,

முணங்குகிமிர் வயமான் முழுவவி ஒருத்தல், ஊன்கசை உள்ளம் துரப்ப, இாைகுறித்துத் தான்்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு,