பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி 57

வடபுல மன்னர் வாட, அடல் குறித்து இன்ன வெம்போர் இயல்தேர் வழுதி! இது கண்ணிய தாயின், இருகிலத்து யார்கொல் அளியர் தாமே ? ஊர்தொறும் மீன்சுடு புகையின் புலவுகாறு நெடுங்கொடி வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருகல் யாணரின் ஒரீஇ இனியே, கலிகெழு கடவுள் சக்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் இசைமூ தாளர் சாயிடக் குழிந்த வல்லின் கல்லகம் நிறையப் பல்பொறிக் கான வாரணம் ஈனும்

காடாகி விளியும் காடுடை யோரே.” (புறம்: திஉ)