பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

வேந்தர்கள் இன்பம் விழைந்து வாழும் இடங்களாய இலவந்திகைப்பள்ளி, வெள்ளியம்பலங்களைப்போலச்சித்திர மாடமும் ஒன்றாம் ; சித்திரமாடம், ஒவியச் சாலை அல்லது ஒவியக் கூடமாம் என்ப; பழந்தமிழ் அரசர்கள், காவிய வளர்ச்சியில் கருத்து டையராதலைப் போன்றே, ஒவிய வளர்ச்சியிலும் கருத்துடையராவர். நன்மாறன் ஒவியக் கூடம் ஒன்றில் இருந்து ஒவியத்தில் ஊன்றிய உள்ளம் உடையய்ை, ஆண்டுள்ள ஒவியங்களில் ஊறிய உணர்வின குய் மகிழ்ந்து வாழ்ந்திருந்த காலத்தே, மாண்டமையால் போலும், சித்திர மாடத்துத் துஞ்சியான்மாறன் என, அழைக்கப்பெற்றுளான்.

கோவலன் கொலைக்குக் காரணமாய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியற்குப்பின், மதுரை அரசு கட்டிலில் அமர்ந்த அவன் மகன் வெற்றிவேற் செழியனே, சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனுவன் ; நன்மாறன் என்ற இப் பெயர், அவன் அரசுகட்டில் ஏறியபின்னர் மேற் கொண்ட பெயராம் எனக் கொள்வாரும் உளர். அவர்கள் அவ்வாறு கோடற்குரிய சான்று எதையும் காட்டிகு ால்லர் ; கோவலன் கொலேகிகழ்ந்த காலத்தே வாழ்ந்தவர் சீத்தலைச் சாத்தனர்; அவர் நன்மாறனப் பாராட்டி புள்ளார். ஆகவே, நன்மாறன், அக்காலத்து அரசாண் டிருந்த வெற்றிவேற் செழியனேயாவன் எனக் கொண்ட னரோ அறியேம்; ஆனால், ஒரு குலத்தில், ஒரே காலத்தில் பலர் பிறந்து நாட்டின் பல்வேறு பகுதியினும் நாடாண் டிருத்தல் அந்நாள் வழக்கமாம் ஆதலின், அவ்வாறு கோடல் பொருந்தாது ; வெற்றிவேற் செழியன் வேறு ; சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் வேறு என்ற்ே கொள்க.

நன்மாறன் கலையுள்ளம் வாய்க்கப் பெற்றிருத்தற கேற்ப, கவின் மிகு தோற்றமும் உடையனவன்; ஆரம் அணிந்து அகன்று விளங்கும் அழகிய மார்பையும். மமக்