பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 . பாண்டியர்

களிறுசென்று களன்.அகற்றவும், களன்.அகற்றிய வியலாங்கண்

ஒளிறிலேய எஃகேந்தி

அாைசுபட அமருழக்கி

உாைசெல முரசுவெளவி.” (புறம் உசு)

மையணி யானை மறப்போர்ச் செழியன்

பொய்யா விழவின் கூடற் பறந்தலே உடனியைத் தெழுந்த இருபெரு வேந்தர் கடல்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி இாங்கிசை முரசம் ஒழியப் பரந்தவர் ஒருபுறம் கண்ட ஞான்றை ஆடுகொள் வியன்களத்து ஆர்ப்பினும் பெரிதே.”

(அகம்: க.க.க)

தன் போர்வன்மைக்கு ஆற்ருமையினலேயே பகைவர் புறங்காட்டினராயினும், அவரை அம்மட்டோடுவிடின், அவர் ஆணவம் அழியாது; அவர், வேண்டும் படைகொண்டு மீண்டுவரினும் வருவர்; ஆகவே, அவர்களே முற்றிலும் அழித்தல்வேண்டும்; அதுவே தனக்கு அானும், ஆக்கமு மாம் என்று எண்ணினன்; மேலும், பகைவரைத் தன்காட் டகத்தே வெற்றி கொள்வது, தன்போலும் வேந்தர்க்கு விழுமிய சிறப்பாகாது; அப் பகைவரை, அவர்கள் நாட்டுட் புகுந்து அழிப்பதே தன் ஆண்மைக்கு அழகாம் என்றும் எண்ணினுன்; ஆகவே, தோற்ருேடும் பகைவரை விடாது துரத்துக என்றனன்; பகைவர் படைக்குத் தலைமை வகித்து வந்த வேந்தர் இருவருள், சேரன் சிறைப்பட்டா ஞகவே, பகைவர் படை சேரநாடு நோக்கிச் செல்லாது சோளுடு நோக்கி ஒடலாயிற்று; ஒடும் படையை விடாது துரத்திச் சென்ருன் செழியன்; சென்ற செழியன், கொன்னே சென்ருனல்லன்; இடைப்பட்ட பகைவர் நாடு களைப் பாழ்செய்துகொண்டே சென்ருன்; இவ்வாறு சோணுட்டுட் புக்க செழியன், தஞ்சைமாவட்டத்த ஆல்ங் கானம் எனுமிடத்தே, அவ்வாசர் படை அனைத்தையும் அழித்து, அவர் தம் முரசு, குடை, பொருள் முதலாம்