பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 2: பாண்டியர்

எவ்வாருே சிறைபிழைத்துச் சென்று விட்டான் என்பதை உணர்த்தான்்; அடியுண்ட புலி அடங்கி யிராது ; அடித் தாரை அழித்தொழிக்க ஆவன புரியும் என்பதை அறி வான் ஆகவே, சிறை தப்பிய சேரனேப் பிழைத்து வாழ விடல் பெரும் பிழையாம் என முடிவுசெய்தான்் ; உடன்ே பெரும் படையுடன் சேரநாடு நோக்கிச்சென்று, சுள்ளி, பேரியாறு முதலாம் பேராறுகளின் பாய்ச்சலால் பெரு வளம் பெற்றும், யவனர் முதலாம் புறநாட்டு வணிகர்கள், கறிகொண்டு செல்லும் தம் கலம் சிறையப் பொன் கொணர்ந்து குவிப்பதால் பெற்ற செல்வத்தில் சிறந்தும் விளங்கும் முசிறி நகரை முற்றி வளைத்து, சேரர்தம் சிறந்த யானேப்படை அழியவும், போர்வீரர் பலர் புண்ணுற்றுப் புத்தேள் உலகு புகவும் பெரும் போாற்றிக் களம் வென்ற தோடு, அவ் வெற்றி விளங்க, சேர நாட்டிற்குச் சிறப் பளித்து விளங்கிய பொற்பாவை யொன்றைக் கவர்ந்து மீண்டான் :

' கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்,

முதுநீர் முன்துறை முசிறி முற்றிக் களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும்புண் உறுநர்.” (அகம்: நிஎ) 'சோலர்

சுள்ளியம் பேரியாற்று வெண்ணுாை கலங்க யவனர் தங்த வினைமாண் நன்கலம் பொன்ளுெடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்.”

(அகம்: கசக) பல்குட்டுவர் வெல்கோவே.” -

(மதுரைக் கoடு)

சேரநாடு சென்று, செருவென்ற செழியன், கொங்கர் என்பார் தமிழரசர் அனைவர்க்கும் தொல்லை விளக்கும் வல்வில் வாழ்வினாதல் அறிந்து, அவரை அறவே