பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்....நெடுஞ்செழியன் 73

அழிக்க எண்ணினன்; உடனே கொங்கரை அழிக்கும் பணியினத் தன் படைத்தலைவருள் ஒருவனுய அதிகன் என்பான்பால் ஒப்புவித்தான்் ; அதிகனும், தன் மலையில் காத்துக்கிடக்கும் பாண்டியனுக்குரிய யானைப்படை யோடும் சென்று, வாகைப்பறந்தலேயிடத்தே கொங்கரை எதிர்த்துக் கடும்போரிட்டான் ; ஆயினும், போரில் அவன் யானைப்படை அழிக் த விட்டது ; அவனும் இறக் தான்் ; இவ்வாறு பெற்ற வெற்றியால், கொங்கர் அடைந்த மகிழ்ச்சி அடங்குமுன்னரே செழியன் களம் சென்று, கொங்களை வென்று, அவரை அவர் நாட்டினின்றும் துரத்தியதோடு, அவர்க்குரிய நாடு பலவற்றையும் கைப் பற்றிக் கொண்டான் :

வாய்மொழி கல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய ாசைபிழைப் பறியாக் கழல்தொடி அதிகன், கோளற வறியாப் பயங்கெழு பலவின் வேங்கை சேர்க்க வெற்பகம் பொலிய வில்கெழு தான்ைப் பசும்பூட் பாண்டியன் களிறுஅணி வெல்கொடி.” (அகம்: கச2)

'கூகைக் கோழி வாகைப் பறந்த?லப்

பசும்பூட் பாண்டியன் வினவல் அதிகன் களிருெடு பட்ட ஞான்றை - ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.” - (குறுந்: கூகங்)

'கொங்கர் ஒட்டி

நாபெல தந்த பசும்பூட் பாண்டியன். (அகம்: உடுக.) பேரரசர் இருவரையும் பழிகொண்ட நெடுஞ்செழி பன், அவர்க்குத் துணைபுரிந்த தமிழ்நாட்டுச் சிற்றரசர் தம் செருக்கினேயும் அடக்க முற்பட்டான்; முதற்கண், பெருமக்கள் பெருகவாழும் பேறுடையதும், இசை வளர்க்கும் எழில், நிறைந்ததுமாய நீர்ேக்கண் இருந்த, மிழலைக் கூற்றம் எனப் பெயருடைய தொரு சிறு காட்டை