பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாண்டியர்

பாராட்டைப் பெற்றிருந்தான்். சங்ககால அரசர் எவரும், இவனைப்போல் இத்துணைப் புலவரின் பாராட்டைப் பெற் முல்லர்; பத்தொன்பது புலவர்கள் இவனைப் பாராட்டி யுள்ளனர். எனின், இவன் பெருமைதான்் என்னே! இவனைப் பாடிய புலவர்கள்; அள்ளுர் நன் முல்லையார், ஆலங்குடி வங்களுர், ஆலம்பேரி சாத்தனர், இடைக்குன் றார் கிழார், ஈழத்துப் பூதன் தேவன், எருக்காட்ர்ேத் தாயங்கண்ணனுர், கல்லாடனுர், குடபுலவியஞர், குறுங்கோழியூர் கிழார், தத்தங்கண்ணனுர், நக்கீரர், பாணர், பேராலவாயர், பொதும் பில் கிழார் மகனுர், மதுரைக் கணக்காயனுர், மருதன் இள நாகனர், மாங்குடி கிழார், முது கூத்தனர், விற்றாற்று வண்ணக்கன் தக்கனுர் என்போராவர்.

தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யன், இவ்வாறு, தன்னேரில்லாத் தலைவனுதல் அறிந்த குட புலவியஞர் என்ற புலவர், அவன் நெடிது வாழவேண்டும்; நன்று வாழவேண்டும் என்ற எண்ணம் உடையராயினர்; நல்லாட்சி நிலவும் காட்டின் பால், உலகமக்கள் அனைவரும் ஆசை கொள்வதும், அவ்வரசின்கீழ்த் தாமும் இருந்து வாழ விரும்புவதும் இயல்பு; ஆகவே, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் வைத்த ஆள எண்ணுவார், நாற்படைத் துணையினும், நல்லாட்சித் துணையினேயே நாடுதல் வேண் டும்; நாடாண்டு மாண்ட பின்னரும், மன்னர்க்கு மங்காப் புகழ் தருவது அந் நல்லாட்சியே; ஆகவே, அரசர் நல் லாட்சியுடையாதல் இன்றியமையாததாம்; குடிமக்கள் தம் நல்வாழ்வே, எல்லாட்சியாம்; பசியும், பிணியும், பகையும் இன்றிய வாழ்வே பெருவாழ்வு எனப்படும்; அவ்வாழ் விற்கு உணவுக்குறை யுண்டாதல் கூடாது; உணவு, நன் னிலமும், நிறைநீரும் உண்டாய வழியே உண்டு; நீர் அற்ற வழி, கிலம் இருந்தும் பயன் இன்றி; ஆகவே, நீர் நிலைத்து கிறையக் கிடைக்குமாறு நீர்நிலை பலவற்றை ஆங்காங்கே ஆக்கித்தால், உணவு பெறுதற்கு உறுதுணே புரிவதாகும்; ஆகவே, நிலைத்த வாழ்வும், டிேய புகழும் வேண்டுவார், ர்ேகிலே பல காணல் வேண்டும்; இவ்வரிய அறிவுரையினை