பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. இளஞ்சேரல் இரும்பொறை

பெருங்குன்றார் கிழார் பாராட்டிய பேரரசர்களுள், இளஞ் சோல் இரும்பொறை என்பாலும் ஒருவன் ; இவ்ன் குடக்கோச் சேரல் இரும்பொறை எனவும் அழைக்கப் பெறுவன் ; இவனேப் பாராட்டும் ஒன்பதாம் பத்துப் பதிகம், இவன் தந்தை பெயர் குட்டுவன் இரும்பொறை ; இவன் தாய் பெயர், வேண்மாள் அந்துவஞ் செள்ளை என அறிவிக்கிறது ; ஈண்டுக் கூறிய குட்டுவன் இரும் பொறை, தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறையே என ஆராய்ச்சியாளர் கூறுவர்.

இளஞ்சேரல் இரும்பொறை, கடம்பெறிந்த இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன், கடல் பிறக்கோட்டிய செங் குட்டுவன், அண்டர் தலைவன் கழுவுளே வென்ற தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை, நன்னனேக் கொன்ற களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், கபிலர்க்கு நன்ரு என்னும் குன்றேறி கின்று தன் கண்ணிற் கண்ட நாடெல் லாம் காட்டிக்கொடுத்த செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆய இவர்க்குக் காலத்தாற் பிற்பட்டோனுவன் ; இது. கடம்பின் முழுமுதல் தடிந்தும், கழுவுள் புறம் பெற்றும், அண்டர் ஒட்டியும், தன்னற் றேய்த்தம் கொற்றம் எய்திய வேந்தர் வழிவந்தவன் சேரல் இரும்பொறை என வுேம், இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தோற்ற சோழ வேந்தனின் வீரர் களத்திட்ட வேல்கள், கபிலன் பெற்ற ஊரினும் பலவாம் எனவும் பெருங்குன்றார் கிழார் கூறுவ தால் விளங்கும்.

'அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து, பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று, நாம மன்னர் துணிய நூறிக் கால்வல் புரவி அண்டர் ஒட்டிச் சுடர்வி வாகை நன்னற் றேய்த்துக்

கொற்றம் எய்திய பெரியோர் மகுக!