பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூ. பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் என்ற இப் பெயர், மக்கள், இவ்வரசனுக்கு இட்ட காரணப் பெயராம் : இப் பாண்டியன் இயற்பெயர் யாது என்பது வெளிப்பட வில்லை; கோவலம் குத் தவறிழைத்துக் கொடுங்கோலனுயினமை பொருது உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியற்கு முற்பட்டவன் இப் பொற்கைப் பாண்டி யன். மதுரை மாநகரை எரியூட்டிய பின்னரும் மாருச் சினத்தளாய்த் திரியும் கண்ணகி முன்வந்து தோன்றிய மதுராபதி யெனும் அந் நகர்த் தெய்வம், நெடுஞ் செழியன் தவறு செய்தவனல்லன்; அவன் முன்னேரும் தவறு செய் தவரல்லர் என்பதை எடுத்துக்கூறுவாள், அதை நிலைநாட்ட, திே தவருது நிலனுண்ட அவன் முன்னேர் செயல் சிலவற் றைக் கூறுங்கால், இப் பாண்டியன் வரலாறும் உரைக்கப் பட்டுளது.

இப் பாண்டியன் நாடாண்டிருந்த காலத்தே, மதுரை ககரில் கீரந்தை என்பானெரு அந்தணன் இருந்தான்்; அவன், தன் பால் வந்து இரப்பார்க்கு வழங்கிக் துணை புரிந்து வாழும் பயனுடை வாழ்வைப் பெறமாட்டா வறிய ளுகலறிந்து வருந்தினன். அவ் வாழ்விலிருந்து வாழ விரும்பா அவன், தன் வறுமை போக்கும், வளம் தேடிக் கொணர விரும்பினன். அவனே யன்றி வேறு துனேயில்லா அவன் மனைவி, அவனைப் பிரிந்து தனித்து வாழ வருந்தி ஞள் ; மேலும் அவர்கள் வீடு வாயிற் கதவும் பெறமாட்டா வறுமை யுடையது ; அவ் வீட்டு வாழ்வு, ஊர்ப்பொது விடத்து வாழ்வினும் காப்பற்றது; அத்தகைய வீட்டில் தனித்து வாழ் வாழ்க்கையால் வரும் ஏதங் கண்டு அஞ்சி ஞள்; அவள் அஞ்சுகிருள் என்பதறிந்த அந்தணன், * நாட்டு மக்கட்கு அாணுவான் அரசன் ஒருவனே; அவன் காவலுக்கு முன், பிற காவல்கள் பயனற்றனவாம்; நம் நாட்டு அரசன், நாட்டு மக்கட்காம் நலிவு காணப் பொறுப் பானல்லன்; அவன் ஆளும் நாட்டிற்கு வேறு காவல் வேண்டுவதின்ற; ஆகவே கவலையற்று இருக்க,” எனக்