பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக, மாலை மாறன்

மாலை மாறன் என்ற இவர் பெயர்க்கண் வந்துள்ள மாறன் என்ற சொற் கொண்டு, இவர் பாண்டியர் குடியிற் பிறந்தவராவர் என அறிதலல்லது, இவர் பாண்டியர் என் பதை அறிவிக்கும் வேறு நல்ல சான்று எதையும் கம்மால் காணற்கு இயலாது. இவர் அரசர் குடியில் வங்கவர் என் பதற் கேற்ப, கடற்கரையிலும், கழிக்கரையினும், வாளாம் போலும் விளிம்புகளையுடைய மடல்களைக்கொண்ட தாழை மாங்கள் வரிசை வரிசையாக வளர்ந்து கிற்கும் காட்சிக்குப், பாசறையைச் சூழ, வேலியாக, வேற்படைகளே காட்டி வைக்கும், அரசர் அறிந்த காட்சி யொன்றை உவமை காட்டியுள்ளார்.

தலைவன் பிரிவால் தன் நலன் இழந்த கொடுமையினும், அத்தலைவன் செய்த கொடுமை கண்டு, ஊரார் துற்றும் அலரால் உண்டாம் கொடுமையே மிகமிகப் பெரிதாம் எனக் கூறினுள் ஒரு பெண், எனப் பாடித் தன் துயர் காணுமையும், தகைசான்ற சொற்காத்தலும் தமிழ்க்குல மகளிர்க்குத் தனிச்சிறப்பளிக்கும் பெரும் பண்புகளாம் என்பது புலப்படுத்தியுள்ளார் :

' கடலம் கானல் ஆயம் ஆய்ந்த என்

கலம் இழந் ததனினும் நனியின் ஞதே : வாள் போல் வாய கொழுமடல் தாழை மா?லவேல் நாட்டு வேலி யாகும் மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பாந்துவெளிப் படினே.”

(குறுக் : உசடு)