பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். முடத்திருமாறன்

தமிழ்ச்சங்கம் மூன்றனுள், இடைச்சங்கத்தின் இறுதியைக் கண்டு, கடைச்சங்கத்தைத் தோற்று வித்த தனிச்சிறப்புடையவன் முடத்திருமாறன், குமரிநாடு, கடல்கோளால் அழிவுறுதற்கு முன்னர், குமரியாற்றிற்கும், தாம்பிரபாணி யாற்றிற்கும் இடைப்பட்ட அக் குமரி நாட்டைக், கபாடபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட பாண்டிய அரசர்களுள் முடத்திருமாறனும் ஒருவன். கபாடபுரத்தே இருந்த இடைச்சங்கத்தைப் போற்றிப் பணிய பாண்டிய அரசர்கள் ஐம்பத்தொன் பதின் மருள் இறுதியில் வாழ்க்கோனும் இவனே ; இவன் காலத்தே நிகழ்ந்த ஒரு பெருங்கடல்கோளால், பாண்டிநாட்டின் பெருகிலப்பரப்பும், அதன் தலைநகராய கபாடபுரமும் அழிந்தொழிந்தன; இக் கடல்கோளால் அழிவுருது பிழைத்திருந்த முடத்திருமாறனும், தமிழ்ப்புலவர்களும் சிறிது வடக்கே சென்று, மணலூர் என்னும் சிற்றுார் ஒன்றில் சின்னுள் வாழ்ந்து, பின்னர்க் கூடன்மா கோடைந்து வாழ்ந்தனர் ; ஆங்கே, கடைச்சங்கத்தை அமைத்துச் செந்தமிழ் வளரத் துணை புரிந்தான்். தமிழ் மொழிக்கு நேர இருந்த பெருங் கேட்டை நீக்கி, அது வளரத் துணை புரிந்த பெருமையுடையான், இம் முடக் திருமாறன்.

' அவரைச் சங்கம் இரீஇயனர் வெண்டேர்ச் செழி யன் முதலாக, முடத்திருமாறன் ஈருக ஐம்பத்தொன் பதின்மர் என்ப; அவருட் கவியரங்கேறினர், ஐவர் பாண்டியர் என்ப; அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்து என்ப; அக்காலத்துப்போலும் பாண்டிய குட்டைக் கடல் கொண்டது. ”

அவர்களைச் சங்கம் இரீஇயனர் கடல் கொள்ளப் பட்டுப் போத்திருந்த முடத்திருமாறன் முதலாக, உக்கிரப் பெருவழுதி ஈருக, நாற்பத்தொன்பதின்பர் என்