பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

பண்டைத் தமிழகத்தில், ஆண்டவனும், அரசனும் இருந்து ஆட்சி செலுத்தும் பேரவைகள் பல, ஆங்காங்கே யிருந்தன ; அவை, கூத்தம்பலம், பேரம்பலம் எனத் தொழிலானும், தகுதியானும், பொன்னம்பலம், வெள்ளி யம்பலம் என அவை ஆக்கத் துணைபுரியும் பொருள்களா லும் பெயர் பெற்றுளளன. அரசர்கள், இத்தகைய அம்பல வாழ்வைப் பெரிதும் விரும்பி மேற்கொள்வ ாாதலின், அவருட் சிலர், அவ்விடங்களிலேயே இறந்து போதலும் உண்டு ; அவ்வாறு வெள்ளியம்பலம் ஒன்றில் இருந்து உயிர்நீத்தமையான், இப் பெருவழுதி, வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி எனப் பெயர் பெற் এp aয় ? ৪টা,

ஏனேப் பாண்டிய வேந்தர்மாட்டுக் காணலாகா இரு பெருஞ் சிறப்பு, வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி பால் இருக்கக் காண்கிருேம் ; இவன் பிறந்த பாண்டியர் குடிக்குப் பகைவராலோ, அல்லது பிற காரணங்களாலோ பெருங்கேடு வர்துற்றது ; பாண்டியர்குடி பெருமை குன்றிப் பாழ்கில உற்றுவிட்டது; வீான என விழுச் சிறப்புடையாற்கு ஆண்மையாவது, அவன் பிறந்த குடிக்குப் பெருமை தேடித் கருதலேயாம் என்பதை உணர்ந்த இப் பெருவழுதி, பல திசையினும், பெருங்கிளே களேப் பாப்பி, பெருகிழல் செய்து கிற்கும் போல மரம் ஒன்றின் அடி ஆண்டு முதிர்வாலோ, அல்லது வேறு காரணத்தாலோ, தின் ஆற்றலற்றுப் போயவழி, அம்மாத்தி னின்ற தோன்றி கிற்கும் விழுதுகள், அம்மரத்தை அழிய விடாமல் கின்று தாங்கினுற்போல், தளர்ந்த தன் குடியின் தளர்ச்சி போக்கிப் பேணிப் பெருமையுடையதாக்கிய உரவோன் நம் பெருவழுதி; அவ்ன்பால் அமைந்து கிடந்த அருங்குணங்களுள் இஃது ஒன்று :