பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. வெற்றிவேற் செழியன்

வெற்றிவேற் செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் மகனவன்; இளஞ் செழியன் எனவும் அழைக் கப் பெறுவன் ; பாண்டிய நாட்டின் தென்பகுதித் தலை நகராய கொற்கையிலிருந்து, தங்தைக்குப் பதிலாகத் தரணியாண்டிருந்த இவன், தந்தை கோவலற்குக் குற்றம் இழைத்துக் கோல்கோடியமை கொண்டு உயிர்விட்டான் என்பதறிந்து, கொற்கையின் நீங்கி, மதுரை போந்து, மணிமுடிசூடி மாநிலம் காத்து வந்தான்். இவ்வாறு, மதுரையில் இவன் அரசுகட்டில் ஏறிய காலம், சோன் செங்குட்டுவன், கண்ணகிச் சிலைக்காய கல் கொணர்வான் வேண்டி, வடகாடு நோக்கிச் சென்றிருந்த காலமாகும். இவன், கடல் சூழ்ந்த இலங்கையில் கயவாகு வேந்தனும், சோணுட்டு உறையூர்க்கண் பெருங்கிள்ளியும், சேரநாட் டில் செங்குட்டுவனும் அரசோச்சியிருந்த அக்காலத்தே, அவரோடொப்ப ஆண்டிருந்தவனுவன்.

இவன் ஆட்சிக் காலத்தில், பாண்டிய நாடு மழைவுளம் இழந்து வறுமையுற்றிருந்தது; அவ் வ. மை நீங்கிக், குடி கள் இன்புற்று வாழுமாறு, கண்ணகிக்கு விழாவொன்று எடுத்து, பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று வேள்வி செய்தான்் ; இதல்ை கண்ணகி சினம் தனிய, நாடு மழை பெற்று, பசியும், பிணியும் நீங்கி, வசியும், வளனும் பெற்று வாழ்ந்தது. வெற்றிவேற் செழியன் வாலாருக நம்மால் அறியத் தக்கன இத்துணையவே.

"கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் பொற்ருெழில் கொல்லர் ஈாைஞ் நூற்றுவர் ஒருமுலை குறைத்த கிருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லே உயிர்ப்பலி ஊட்டி, உரைசெல வெறுத்த மதுரை மூதார் அாைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலத் தென்புல மருங்கில் தீது தீர் சிறப்பின்