பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளஞ்சேரல் இரும்பொறை 31

புகழ்பாடி வருவார்க்கும் வாரி வழங்கும் வள்ளியோர் வாழ்வதிஞலேயே, இரவலரும், புலவரும் இறவாது வாழ் கின்றனர் இவ்வுலகில்; அரசர்கள் பால், அவ்வருட் குணம் இல்லாதுபோயின், இரவலர் இல்லாது அழிவர் ; ஆதலின், இரப்பார்க்கு ஒன்று ஈவதைக் கடப்பாடாக் கொள்வது காவலர்க்கழகு; ஆனால், அரசரெல்லாம் கின்னேப் போல்வ ராயின், என்னே ப் போலும் புலவர்கள் இவண் பிறவாது ஒழிவாராக” என்று கூறிப் பழித்து வெளியேறினர் :

'உள்ளி வந்த ஒங்குநிலைப் பரிசிலென் :

வள்ளியை யாதலின் வணங்குவன் இவன் எனக் கொள்ளா மாந்தர் கொடுமை கடற கின் உள்ளியது முடித்தோய் மன்ற ; முன்ஞள் கையுள்ளது போற் காட்டி, வழிநாள் பொய்யொடு கின்ற புறநிலை வருத்தம் நாணு யாயினும் நாணக் கூறி என் அணங்கு செந்நா வணங்க ஏத்திப் பாடப் பாடப் பாடு புகழ் கொண்ட்கின் ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச் செல்வலத்தை யானே.” 'அன்புகண் மாறிய அறனில் காட்சியொெ

தும்ம ைேரும் மற்றினையாாயின், எம்மனேர் இவண் பிறவலர் மாதோ !”

(புறம்: உகக, உகo)

உளம் வருந்த வெளியேறிய புலவர் பெருங்குன்றார் கிழார் மனேயில், மக்களும் மனைவியும் வறுமையால் வாடு வரே அவர்க்கு வழியென்ன செய்வேன் என்ற எண்ண முடையராய் வழி கடந்து சென்றார் ; ஊருள் நுழைந்து, தம் இல் இருக்கும் இடம் சென்று நோக்கினர்; ஆங்கு முன்னிருந்த சிறு குடிசைக்குப் பதிலாகப் பெருமனே ஒன்றிருக்கக் கண்டார் ; நம் வீடு இருப்பது சண்டன்று போலும் என எண்ணி, அப்பாற் செல்வாராயினர்; அங் கிலேயில், அப்பெருமனேயுள்ளிருந்த அவர் மனேவியார் அழைக்குங் குரல் கேட்டுத் திரும்பி அவ்வீட்டினுள்,