பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சேரர்

வார்க்குச் சோறளித்துப் பேணுவதும் இக்காட்டு வழக்க மாம்; உதியன் செயலும், இவ்வாறு நடைபெற்ற விழா நிகழ்ச்சியைக் குறிப்பதே என்பர் மற்றும் சிலர் , உதியன் சோலாதனுக்கும், பாரதப்போர் நிகழ்ச்சிக்கும் யாதொரு தொடர்பும் இருந்ததில்லை; உதியன் பெருஞ்சோறளித்தல், இறந்த தன் முன்னுேரைக் குறித்து ஆண்டுதோறும் நிகழ்த்தும் வினவுவிழா நிகழ்ச்சியைக் குறிப்பதேயன்றிப் பிறிதில்லை எனக் கருதுவர் வேறு சிலர். செல்வக்கடுங்கோ வாழியாதன் எனும் மற்றொரு சேரவேந்தன், இறந்த தன் முன்னேர்க்கு அவர்தம் மக்களைக்கொண்டு, ஆற்றவேண்டிய கடனுற்றிப் பேணிஞன் எனக் கூறும் கபிலர் கூற்றுள், முதியாரைப் பேணும் சேரர் செயல், இறந்தார்க்குச் செய் யும் கடனேயன்றிப் பிறிதன்று என்பது உறுதியாதல்.

g2_ঞ্জক্টোf 55 : *.

"இளந்துணப் புதல்வரின் முகிழி பேணிக்.

தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல் ?

(பதிற்று : எ0)

பேராசர்பால் அமையலாம் பண்புகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவன் பெருஞ்சோற்றுதியன் சேர லாதன் ; அவன் பிழைபொறுக்கும் பண்புடையவன்; வினையொன்று ஆற்றத் தொடங்குவனுயின், எண்ண வேண்டுவன எல்லாம் எஞ்சாது எண்ணும் அஃகி அகன்ற அறிவுடையவன்; எதிர்த்தார் எவரையும் காங்கி கிற்க வல்ல பேராற்றலும், பெருந்திறலும் உடையவன்; அழித் தற்குரியாரை அடியற அழிக்கும் ஆற்றல் உடையவன் ; அடைந்தார்தம் துயர் போக்கி ஆட்கொள்ளும் அருட்குண முடையவன்; இப்பண்புகள் வேறு எவர்மாட்டும் அமைய லாகா அளவு அவன்பால் அமைந்திருக்கக் கண்ட புலவர் முரஞ்சியூர் முடிகாசராயர், பொறுமை, அகலம், ஆற்றல், அழித்தல், அருளல் ஆகிய பண்புகளின் நிலைக்களங்களாகிய கிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகியவற்ருேடு அவன் ஒத்தவனுவன் என்று கூறி, ஐம்பெரும் பூதத்தியற்கை யினையும், அவை ஒவ்வொன்றும் முறையே பெற்றுள்ள