பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சேரர்

யார்க்குக் கல்லெடுத்து விழாக்கொண்டாடக் காரண மாயது, ' கம் அகனடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பாசல் வேண்டும்” என, இவள் கூறிய கூற்றே எனின், அவள் மாண்பினை மதிப்பிடல் கூடுமோ கணவேன் கல் கொண்டுவருவான் வேண்டி வடநாடு சென்றிருந்த முப்பத்திரண்டு திங்களும், ஊனும் உறக்கமும் ஒழித்து, அழகிய ஆடையும் அணியும் அகற்றி வாழ்ந்த வனப்பினே வாயாாப் பாராட்டியுள்ளார் அடிகளார். இத்தாய் வயிற் மதித்த தகுதியுடையோனுய குட்டுவஞ்சோலைச் செங்குட்

வன் தன் உள்ளம் விரும்பும் உயர்பெரும் புலவராய பாணர்பால் ஒப்படைத்து உயர்பேரறிவாளனுக்கினன்.

செங்குட்டுவன் அரியணை ஏறுதற்குக் காரணமாய நிகழ்ச்சி, அவன் தம்பியார் இளங்கோவடிகளின் இனிமைப் பண்பினை உலகறியக்காட்டும். மக்கள் இருவரும், மன்னர் பலரும் குழப் பேரத்தாணிக்கண் இருந்த நெடுஞ்சோ லாதன் முன், ஒருநாள் கிமித்திகன் ஒருவன் தோன்றி, " மன்னர் மன்னவ கினக்குப்பின் கின் அரியணை இருந்து ஆட்சிபுரியும் ஆகூழ் உடையோன் இவ்விளையோனே' என் றனன். அதைச் செவிமடுத்த மூத்தோன், உரைத்தான்ே உருத்து நோக்கினன் , இளையோன் அவன் அகத்துயர் அறிந்தான்்; மூத்தோன் இருக்க இளையோன் அரசனுதல் அறமன்று ; கிமித்திகன் உரைத்தது முறையன்று என்ப தையும் உணர்ந்தான்். மூத்தோன் துயர்தீா, முறைவாழத் துறந்து குணவாயிற்கோட்டம் புகுந்து அறவாழ்வு மேற் கொண்டான்; என்னே அவன் தியாகம்

செங்குட்டுவன் அரியணை ஏறிய பின்னர் மேற் கொண்ட போர்களும், பெற்ற வெற்றிகளும் பலவாம். வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியொடு போரிட்டு இறந்த தன் தந்தையைத் தொடர்ந்து உயிர்நீத்துப் புகழ் பெற்ற தன் தாய் நற்சோணையின் படிமத்தை கங்கையில் ாேட்டக் கருதி வடநாடு சென் முன். கங்கைக் கரையில் ஆரிய அரசர் பலர் ஒன்று கூடி எதிர்த்தனர். அப் போற் றங்கரையில் எதிர்த்தார் அனைவரையும் செங்குட்டுவன்