பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சேரர்

வன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், கடலோட்டிய வெல்புகழ்க் குட்டுவன் என்றெல்லாம் பெயரிட்டுப் பாராட் டினர். செங்குட்டுவன் பெற்ற கடற்போர் வெற்றியை, அவனைப் பாடிய பெரும்புலவராய பாணர் விளங்கக் கூறிப் பாராட்டியுள்ளார் : “ ஒயாது ஒலிக்கும் அலைகளையுடைய கடல்நீர், காற்ருல் அலைப்புண்டு சிறுசிறு திவலைகளாக மாறியுடையுமாறு பெரும்போரிட்ட தாள்கள் அவன் தாள்கள் ” எனவும், ஓவென முழங்கும் அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலிடையே மணிபோல் ஒளிவிட்டு மின்னும் வேற்படை கொண்டுசென்று, எதிர்த்த பகை வரை ஆற்றல் கோன்ற அழித்து வென்ற அரசர், குட்டுவ கின் முன்ளுேரிலும் ஒருவரும் இலர்; அவ் வாற்றல் உடையார் இனிப் பிறத்தலும் அரிதே ' எனவும், ' உயர எழுந்து ஒய்ந்து அடங்கும் அலைகளேயுடைய நீர்ப் பாப்பாகிய ஒலிக்கும் கடலே அணுகக்கொண்டு வாழ்ந்த பகைவரைச் சங்குகள் ஒலிக்கும் அக்கடலும் கலங்குமாறு வேற்படை கொண்டுசென்று, வென்று ஒட்டிய வெற்றி யால் விளங்கு புகழ்பெற்ற குட்டுவன் ' எனவும், ' கடலி டையே சென்று, அக்கடலை அரணுகக்கொண்டு ஆங்கு வாழ்ந்திருந்த கடற் பகைவரோடு அரிய போர் ஆற்றிய, குளிர்ந்த கடற்கரைத் தலைவ” எனவும், தன்ளுேடு எதிர்த்துப் போரிடத்தக்க பெரும்பகை எதையும், இங்கில வுலகில் காணமாட்டாமையால் செங்குட்டுவன் தோள்கள் "தினவு கொள்ளலாயின. ஆகவே, அவன் தன் தோள் பூரிக்கப் போர்புரியும் வேட்கையே காரணமாகக் கடலை வளைத்துப் போரிட்டான். உயர்ந்து எழுந்து விழும் அலை களேயுடைய அக் கடல்நீர், அவன் ஆற்றலுக்குத் தோற்றுப் பின்னிடுமாறு ஒட்டிப் பெருமையுற்றது அவன் தைவேல்” எனவும் பாராட்டும் பரணர் பாராட்டுரைகள் பதிற்றுப் பத்தினும் அகநானூற்றிலும் இடம் பெற்றுள்ளன.

' கால்உளைக் கடும்பிசிர் உடைய, வால்உளைக்

கடும்பரிப் புரவி ஊர்ந்த நின் படுதிரைப் பனிக்கடல் உழந்த தாளே."