பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சேரர்

வியலூரில் வெற்றி கண்ட செங்குட்டுவனுக்கு வேறு பணிகள் காத்துக் கிடந்தன ; சோழ நாட்டில், தன் அம் மான் இறந்த பின்னர், அவன் இளைய மகன் ஆட்சித் தலைமை ஏற்பதைப் பொருது, சோழர் குலத்து வந்த அரசர் ஒன்பதின்மர், நாட்டில் அமைதி குலத்திப் பெருங் கலகம் விளைவிப்பாராயினர் : செங்குட்டுவன், அவ்வொன் பதின்மரையும், உறையூர்க்குத் தென்பால் உள்ள நேரி வாயில் என்னுமிடத்தே எதிர்த்துப் போரிட்டு ஒரு நாட் பொழுதிலேயே, அவர் அனைவரையும் அழித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டி, தம் அம் மான் சேயையும் அரி யணை ஏற்றிவைத்து அகமகிழ்ந்தான்் :

' ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை கேரி வாயில் நிலைச்செரு வென்று.”

(சிலம்பு, உஅ : க.க சு-எ) ' மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா

ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொருஅர், ஏவல் கேளார் வளநா டழிக்கும் மாண்பின ராதலின், ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்து, அவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்.”

(சிலம்பு, உஎ : க.க அ-உ-) ' ஆராச் செருவிற் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து.”

- (பதிற்று, பதிகம் : டு) நேரிவாயிலிற் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, சோழ நாட்டில் தேவாரம் பெற்ற திருநகராகிய இடும்பா வனம் எனப்படும் இருப்பாத வனத்திலும், செங்குட்டுவன் ஒரு வெற்றிக்கு உரியனுயின்ை ; பெரும்படையோடு சென்று, கடும்போர் ஆற்ற வேண்டிய அப்போரில், செங் குட்டுவன் பகைவாயினர் இன்னுர் என்பது இனிது புலப் படவில்லை : *.

நெடுந்தேர்த் தான்ையொடு இடும்பிற் புறத்திறுத்துக் கொடும்போர் கடந்து.” (சிலம்பு, உஅ : ககஅ-க)