பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 47

இல்ை யெல்லாவற்றினும், செங்குட்டுவனே உலகறியச் செய்த நிகழ்ச்சி, அவனேச் சோருட் சிறந்தோளுக்கிய விகழ்ச்சி. கண்ணகி தேவியார்க்குக் கல்லெடுக்க வடநாடு சென்று, தென் தமிழர் சிறம் அறியாது, ஆணவத்தால் அறிவிழந்த இழித்துப் பேசிய வடவாரிய அரசர் கனக விசயரைக் கங்கைக்கரைக்கண் வென்று, அவர் தலைமீதே அக் கல்லையும் ஏற்றிக் கொணர்ந்து, கோயில் கட்டிக், கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், நூற்றுவர் கன்ன ரும் வந்து வழிபட விழாவெடுத்த சிறப்பேயாம்; இச் சிறப்பெல்லாம், சிலப்பதிகாரத்தே, குன்றக்குரவை முத லாக, வாந்தரு காதை ஈருக உள்ள ஏழு காதைகளினும்

விளங்க உரைக்கப்பட்டுள்ளன ; அவற்றின் விரிவையெல் லாம் ஆண்டு உணர்க.

செங்குட்டுவன், செருப் பலகடந்த சிறப்புடையணு தலேயன்றி, கொடுத்து மகிழும் குணச்சிறப்பும் உடையவ வைன் ; மழை பெய்யாது போதலினுல், நாட்டில் மூங்கில் சுருகவும், வளங்குன்முப் பெருங்குன்றுகள் வாடவும், அருவிகள் நீர் அற்று அழகிழப்பவும் பெரும்பஞ்சம் தோன்றிய காலத்தில், சேரநாட்டுப் போாறு, கரைகளை அழித்து ஒடி, பொன்னேர் பூட்டும் உழவர் உள்ளமெல் லாம் பூரிக்கச்செய்யுமாறு பெருமழை பெய்து பெரு வெள்ளம் பெருகச்செய்யும் வானத்தைப் போன்ற கொடைக்குணம் உடையான் குட்டுவன்.

செங்குட்டுவன், போக் காணிக்கண் அமர்ந்து, பொருள் பெறு சையால் தன்னேப் பாடியடையும் புலவர் பெருமக்களே விரும்பி ஏற்று, அவர் ஆா உண்ணுமாறு அருகிருந்து ஊட்டுவன் , ஆடல் பாடல்களால் தன் அகம் மகிழச்செய்யும் பாணர், கூத்தர் முதலியோர்க்குப் பொற் கலன் அளித்துப் போற்றவன் ; கையிற்ருங்கிய யாழி' னின்றும் எழும் இசையொடு இயைய இன் குரல் எழுப்பிப் பாடும் விறலியர்க்குப் பிடியானே பல தந்த பேணி மகிழ் வன் ; வெற்றிமேல் வெற்றியே வேட்கையாகக் கொண்டு, பகைவேக்தர் உள்ளம் பதைபதைக்குமாறு, அவர் காட்டிற்