பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சேரர்

புகுந்து போரிட்டுப் பொருள்பல கவர்ந்துவரும், ஆண்மை நிறைந்த ஆற்றல் மறவர்க்குக் கொல்லும் யானைகளைக் கொடுத்துக் கொற்றம் போற்றுவன் ; கையில் கோலேந்தி, மன்றினும், மறுகிலும் மன்னன் புகழை மகிழ்ந்து பாடும் பாணர்தமக்குப் பரிசாகப் பரிபல அளித்துப் பாராட்டுவன்; இவற்ருலெல்லாம் செங்குட்டுவன் புகழ், குன்றிலிட்ட விளக்கென, உலகெலாம் பரவி ஒளிவிடல் கண்டு, அவன் பகைவர் பொருமை கொள்வர் எனினும், அவன் புகழ் அவன் உள்ளத்தே அடங்கி மறைந்துபோக மாண்புடைய தாகவே, அப்பகைவரும் தம்மை மறந்து, அவர் புகழ் பாராட்டுவர் :

' இரும்பணை திரங்கப், பெரும்பெயல் ஒளிப்பக்

குன்றுவறங் கூடாச் சுடர்சினம் திகழ அருவியற்ற பெருவறற் காலேயும் அருஞ்செலற் போாற்று இருங்கரை உடைத்துக் கடியேர் பூட்டுநர் கடுக்கை மலேய வாைவில் அதிர்சிலே முழங்கிப் பெயல்சிறந்து ஆர்கலி வானம் தளிசொரிங் தாஅங்கு, உறுவர் ஆா, ஒம்பாது உண்டு, நகைவர் ஆா நன்கலம் சிதறி, ஆசிெறை அறுத்த ரம்புசேர் இன்குரல் பாடு விறலியர் பல்பிடி பெறுக ; துய்வி வாகை நுண்கொடி உழிஞை வென்றி மேவல் உருகெழு சிறப்பின், கொண்டி மள்ளர், கொல்களிறு பெறுக ; மன்றம் படர்ந்து, மறுகுசிறைப் புக்குக் கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே என்றும் இகல்வினை மேவலே யாகலின், பகைவரும் தாங்காது புகழ்ந்த தாங்குகொளை முழவின் தொ?லயாக் கற்ப.” (பதிற்று : சங்) ஆற்றல்மிக்க அரசனுகவும், ஏற்ருேர் இன்முகம்

கண்டு உவக்கும் உயர் கொடையாளஞகவும் விளங்கிய