பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 49.

செங்குட்டுவன், கடவுள் அன்புகொண்ட காவலனுகவும் விளங்கினன். கண்ணகிக்குக் கற்கொணர்வான் வேண்டி, வடகாடு கோக்கிச் செல்வோன்முன், ஆடகமாடம் என்னும் கோயிலில் அறிதுயில் அமர்ந்தருளும் திருமாலின் பிர சாதத்துடன் வந்து சிலர் அரசன் முன் சிற்க, சிவபிரான் திருவடிகளைச் சென்னியிற் ருங்கி யிருக்கும் செங்குட்டுவன் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத்துத் தாங்கிளுன் என இளங்கோவடிகள் கூறுவர் :

' ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்

சேடம் கொண்டு சிலர் நின்று எத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்.” (சிலம்பு, உசு: உ-எ)

இவ்வாறு பல்லாற்ருனும் பாருளோர் போற்றவாழ்ந்த செங்குட்வேன், முதுபெரும் புலவராய பரணர்தம் பாடல் கேட்டு, அவர்தம் அருமையும் பெருமையும் அறிந்து, அவர்க்குத் தன் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய உம்பற்காட்டின் வருவாயினே வழங்கியதோடு, அவர்பால் தன் அருமை மகன் குட்டுவன் சோலேயும் ஒப்படைத்து, அவனே அறிவுத்துறை போய பெரியோனுக்குமாறு வேண்டினன். புலவர்பால் அவன் காட்டும் பெருமதிப் பினைப் பாராட்டி மகிழ்வோமாக,