பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணைக்கால் இரும்பொறை 53

அக்கு ேேர்க்க கதியினைக் கண்டார் ; கண்ணிர் விட்டுக் கலங்கினர்; சேரனேச் சிறைவீடுசெய்து சிறப்பித்தல், அவன் ஆருயிர் நண்பராய தம் கடனே என உணர்த்தார்; சோழன் செங்களுன், சேரனேச் சிறைசெய்த கொடியோன் எனினும், புலவர்டாலும், அவர்தம் பாக்கள்பாலும் பெரு மதிப்புடையான் என்பதை அவர் அறிவாராதலின், உடனே அவன் அரசவையினே விரைக்கு அடைந்தார் ; நாற்பது வெண்பாக்களைக் கொண்ட, களவழி நாற்பது” என்ற கவின்மிகு நூலைப் பாடிப் பாராட்டினர் அதில், சோழன் செங்களுன், சோமான் கணக்கா விரும்பொறையோடு கழுமலத்திடத்தே நடத்திய போரின் சிறப்பினேயும், அப் போரில் செங்களுன் பெற்ற வெற்றிச் சிறப்பினேயும் விளங்க உரைத்துப் பாராட்டினர் ; அந் நூலின் பாடற் பொருளையும், அதன் பெருமையையும் உணர்த்தான்் செங் களுன் ; புலவர் உளம் உவக்கும்வண்ணம், அவர் அன்பு காட்டும் அரசனுய சேரமானச் சிறையினின்றும் விடுத்து அவர்பால் ஒப்படைத்து மகிழ்ந்தான்்.

களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட பரிசும்.”

(கவிங்கத்துப் பரணி) இன்னருளின், மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திபனும்.”

(விக்கிரம சோழனுலா)

இனி, சோமான் கணக்கால் இரும்பொறை, பொய் கையார் கவி பாடிச் சிறைவீடுசெய்யும்வரை, உயிர் காத்து கின்ருனல்லன், தன் உள்ள எண்ணத்தை உருவாக்கும் எழுத்தோவியத்தை ஏட்டில் தீட்டியதும் இறந்து இறவா நெறி பெற்றுவிட்டான் என்றே அறிஞர் பலரும் கருதுவர். மானம் இழந்தபின் வாழாமை முன் னினிதே என்ற மறைப்பொருட்கு வழிகாட்டிய மன்னவன் வாழ்க!