பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. குட்டுவன் கோதை

fo சேரவேந்தர், குட்டுவர், குடவர், பொறையர் எனக் குடிவகையாற் பலராவர். சோகாட்டின் ஒரு பகுதியாகிய குட்டநாட்டை ஆண்டவர், குட்டுவர் என அழைக்கப் பெறுவர். அக்குட்டுவர் குடியில் கோதை என்பான் ஒரு கோ, கோலோச்சியிருந்தான்். கோதை எனும் பெயர், ஆதன் என்பதைப் போன்றே சோரைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்றாம். புலவர்களே விரும்பி வரவேற்று வாரி வழங்கும் வள்ளியோயை குட்டுவன் கோகை, பகை வர்க்குப் புலிபோலும் பேராற்றல் உடையனவன். ஒரு நாட்டிற்குரிய அரசன், அங்காட்டுள், தன்னே எதிர்கின்று தடுப்பார் எவரும் இல்லாமையால், எவரையும் கேளாதே மாருக எல்லோரும் எதிர்வந்து போற்ற, இறுமாந்து தன் தலைதுாக்கிச் சென்று அரசவை புகுவதேபோல், குட்டுவன் கோதையின் அரசவையுள் சென்று இருத்தல் புலவர் களுக்கு மிகமிக எளிது ஆனால், அவளுேடு பகைகொண்டு வாழ்வார், புலிவாழும் காட்டினுள் ஆட்டிடையர் புகவும் அஞ்சுவதேபோல், அவன் நாட்டுள் புகவும் அஞ்சுவர் ; அத்துணை ஆற்றல் உடையவன். இவ்வாறு கொடை, கொற்றம் ஆகிய இரண்டானும் சிறந்த அவன் புகழ் கோனுட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்குமானுர் போலும் புலவர்களாலும் பாராட்டப்பெற்றுள்ளது.

எங்கோன் இருந்த கம்பலே மூதார் உடையோர் போல இடையின்று குறுகிச் செம்மல் நாளவை அண்ணுந்து புகுதல் எம்மன வாழ்க்கை இாவலர்க்கு எளிதே; இாவலர்க்கு எண்மையல்லாது, புரவெதிர்ந்து வானம் நாண வரையாது சென்ருேர்க்கு ஆனது ஈயும் கவிகை வண்மைக் கடுமான் கோதை துப்பெதிர்க் கெழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங் கால்ப் பாசிலேத் தொடுத்த உவலைக் கண்ணி மாசுண் உடுக்கை மடிவாய் இடையன் சிறுதலே யாயமொகி குறுகல் செல்லாப் புலி துஞ்சு வியன்புலத் தற்றே வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.’ (புறம் : இச)