பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - சேரர்

குறிஞ்சிகிலத்துக் குறமகளிர், தம் புனத்துத் 'தினையின் உண்ணவரும் பறவைகளைத் துரத்தத் தம் கையில் உள்ள தட்டை என்ற கிளிகடி கருவியைக் தட்டி ஒலி எழுப்பி ஞாாக, அவ்வொலி கேட்டுக் கதிர்கள் முற்றித் தலை சாய்ந்துகிடக்கும் கழனிகளில் வாழும் பறவைகளும், கடலேச் சார்ந்த கழிகளில் வாழும் பறவைகளும் அஞ்சிப் பறந்து அப்பாற் செல்லும் ” என்றும் கூறியுள்ளார். இத் துணை வளம் விளங்க ஆண்ட அவன் ஆட்சியின் நலனே காவார வாழ்த்துவோமாக!

  • நாடன் என்கோ ? ஊான் என்கோ ?

பாடிமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ ? யாங்வனம் மொழிகோ ஒங்குவாள் கோதையைப் புனவர் தட்டை புடைப்பின், அயலது இறங்குகதிர் அலமரும் கழனியும் பிறங்குர்ேச் சேர்ப்பினும் புள்ஒருங் கெழுமே.”

(புறம் : சசு)