பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ ri

கச. கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சோகாட்டில் கோட்டம்பலம் என்ருேர் ஊர் உண்டு. அஃது இப்போது அம்பலப்புழை என அழைக்கப்பெறு கிறது. அந்த அம்பலப்புழை இன்றும் பழங்காலச் சிறப்பு வாய்ந்துளது. இதையடுத்து மாக்கோதை மங்கலம் என்ற பெயருடைய ஒர் ஊரும் காணப்படுகிறது. மாக்கோதை எனும் இயற்பெயருடைய இச் சேரவேந்தன், தன் வாழ் காளின் இறுதிக்காலத்தே இக்கோட்டம்பலத்தே வாழ்ந்து உயிர்விட்டாளுதலின், கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக் கோதை என அழைக்கப்பெற்று ளான். இவன் பெயர் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையன்று கூத் தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையாம் என்பர் சிலர். சேரநாடு கூத்துக்களுக்குப் பெயர்போனது கூத்து நடை பெறும் கூத்தம்பலங்கள் பல, அந்நாட்டின் பல பகுதி யிலும் காணப்படும். மாக்கோதை மன்னன், இத்தகைய கூத்தம்பலத்தேயிருந்து, ஆங்கு நடைபெற்ற கூத்தொன் றைக் கண்டு களித்திருந்தவழி உயிர் துறந்தாளுதலின், கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என அழைக்கப் பெற்ருன் ; இவ்வாறு கூறுவாரும் உளர். -

மாக்கோதை தான்் பிறந்த சேரர்குடியிடத்தும், அக் குடிவந்த தம் முன்னேர் இடத்தும் பெரும்பற்று உடையவ குவன். மலேச்சாரலில் யானைக்கன்றை உறங்கவைக்கும் அருவியொலியைக் குறிப்பிடுங்கால், அது தன் குடி முன்னேனுய பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என் பான் அளிக்கும் சோற்றுப் பரிசிலே, அவன் அறச்சாலை அடைந்து பெற்று உண்ணவருவார் ஆண்டுச் செய்யும் பேரொலிபோலும் என உவமை கூறித் தன் குடிப்பற்று குன்றிலிட்ட விளக்கென விளங்கவைத்துள்ளார். ' கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின்

உதியன் அட்டில் போல ஒலியெழுந்து அருவி யார்க்கும் பெருவரைச் சிலம்பு.’ (அகம்: க.சு.அ)

יץ