பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. பல்யானைச் செல்கெழு குட்டுவன்

பல்யானேச் செல்கெழுகுட்டுவன், பாகப் போரில் இருதிறப் பெரும்படைக்கும், அப்போர் முடியுங்காறும் உணவளித்துப் புகழ்பெற்ருன் எனப் போற்றப்படும் பெருஞ்சோற்று தியன் சேரலாதன் மகனுவன் ; வெளியன் வேண்மான் எனும் வேளிர்குலத் தலைவன் மகளாய நல்லினி என்பாள் இவன் காய். இமயத்தே விற்பொறித்து, இமய வரம்பன் எனப் புகழ்மிகு பெயர்பெற்ற நெடுஞ்சேரலாதன் இவன் உடன்பிறந்தான்்; இச் செய்திகள் பதிற்றுப்பத்து, இரண்டு, மூன்று பத்துக்களின் பதிகங்களான் தெளிவாம். போர்க்களத்தே அஞ்சாதி முன்சென்று, அரும்போர் ஆற்றி, பகைவர்தம் பற்றற்கரிய அரண்களே அழித்து | வெற்றி கரும் விறல்மிக்க யானைகள் பல கொண்ட பெரும் உடைமையால், இச் சேரன், பல்யானைச் செல்கெழு |குட்டுவன் எனப்பட்டான் :

' அமர்கோள் நேர் இகந்து ஆர்எயில் கடக்கும்

பெரும்பல் யானைக் குட்டுவன்.” (பதிற்று உக) பல்யானைச் செல்கெழு குட்டுவன், போர்க்களம் பல வென்றவணுவன் ; கடன் மலைநாட்டில் உம்பற்காடு என் றொரு சிறு நாடு இருந்தது ; அதனே வேழக்காடு எனவும் வழங்குவர்; யானேகளே மிகுதியாகக்கொண்டது. சூல் கொண்டு உணவு ஒழித்துக்கிடந்த பெண்புலி விரும்பி உண்னும் உணவினைத் தருவான் விரும்பி, நீண்ட பெருங் கோடுகளையுடைய யானேயொன்றைக் கொன்று வீழ்த்தி, அகன்ற பாறைகள் எல்லாம் அதன் இரத்தக்கறை படியு மாறு ஈர்த்துச் சென்றளித்து, அவ்வெற்றிக் களிப்பால், புற்றரையில் வீழ்ந்து புரண்டெழும் ஆண்புலி வழங்கும் கொடுமையுடையது எனக்கண்ட யானைகள், அக்காட் வாழ்வை வெறுத்து, வழியில் கிடக்கும் பலாக்கனிகளைத் தின்றுகொண்டே வெளியேறும் காடு, அவ்வும்பற்காடு என எருக்காட்ர்ேத் தாயங் கண்ணனர் கூறுவதும் அறிக.