பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. வேங்கை மார்பன் வேங்கைமார்பன், உக்கிரப் பெருவழுதி எனும் பாண்டியன் உலகாண்டிருந்த காலத்தே, பாண்டி நாட்டின் நடுவே இன்று காளை யார்கோயில் என வழங்கு மிடத்தே அரிய அரண் அமைத்த வாழ்ந்திருந்த ஒரு பெருவீரன். வேங்கைமார்பன் என்ற பெயருடைமையான், இவன் ஊக்கமும், உானும் ஒருங்கே உடையனவன் என்பது புலனும்; அவன் அமைத்து வாழ்ந்த அரண், பகைவர் பற்ற லாகாப் பேரரண் வாய்ந்தது, கிலத்தின் அடி எல்லையையும் கண்டதோ என எண்ணலாம் ஆழம்பொருந்திய அகழியினே யும், வானேயும் தீண்டிற்ருே என எண்ணலாம் உயர்வுடைய மதில்களையும், ஒளிக்கதிர் சிறிதும் உட்புகலாகாவாறு அடர்ந்த காவற்காட்டினேயும் கொண்ட அப் பேரரண், வீரர்பலர் ஆங்காங்கே யிருந்து காக்கும் சிற்றாண் பலவற் றைச் சூழப்பெற்ற அருமையினேயும் உடைத்து, வேங்கை மார்பன், இத்தகு பேரெயிற்கு உரிமையுடையணுய் வாழ லேப் பொருத உக்கிரப்பெருவழுதி, அவனேயும் வென்று, அவ்வாணையும் கைப்பற்றத் துணிந்து விட்டான்; பாண் டியர் பெரும்படை, பற்றற்கரிய அப் பேராணைப் பற்றிக் கொண்டது; மாற்ருர் கைப்பட்டு மாண்பிழந்த தன் அாணே, எவ்வாற்ருனும் மீளக் கைக்கோடல் வேண்டும் எனப் பலகால் முயன்ருன் வேங்கைமார்பன் ; ஆனல் அந்தோ தோல்வியே கண்டான் ; இறுதியில், உக்கிரப் பெருவழுதியோ பேராசர் வழிவந்தவன் ; பெரும்படைத் துணையுடையான்; அவனே வென்று தன் அாணேப்பெறுதல் அரிதினும் அரிதாம்; சிவக்கக் காய்ந்த இரும்புண்ட நீரை மீண்டும் பெறல் இயலாததுபோல், பாண்டியன் பற்றிக் கொண்ட தன் அாணே மீளப் பெறுதலும் இயலாதாம் என உணர்ந்து, உறுதுயருற்று உளம் வருக்தி வாழ்ந்தான். கதிர்துழை கல்லா மாம்பயில் கடிமிளை, அருங்குறும் புடுத்த கானப் பேரெயில், கருங்கைக் கொல்லன் செந்தி மாட்டிய