பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு க. கொங்கர் பண்டு, தமிழ் நாட்டில் பிறந்தும், வளர்ந்தும் போாண்மை மிக்க வீரராய்ப், பெருங்கொடை வள்ளல் களாய்ப் பெருக வாழ்ந்தும், பேரரசராய்க், குறுகிலமன்ன ாய் நெடிது கின்று ஆண்டும் வாழ்ந்தோர் பலர் தம் வர லாறுகளே விளங்கும் வகையான் வகுத்துரைத்தல் ஒருவாறு முடிந்தது. இவர்தம் வரலாறு உணரத் துணைபுரிந்த அத் தமிழ் நூல்களே, கெரங்கர், கோசர், தொண்டையர், பூழியர், மழவர், வடுகர், வேளிர் போலும் மறவர்குல மக்கள் சிலர் தம் வரலாறுகளையும் உரைத்துள்ளன. தமிழ கத்தின் அன்றைய அரசியல் நிலைக்கு, அன்னர் வாழ்வும், பெரிதும் காரணமாமாதலின், அவர் குறித்து, அத் தமிழ் நூல்கள் அறிவிப்பனவற்றை மட்டும் தொகுத்துரைத் தலும், தமிழகத்தின் அக்கால அரசியல் நிலையினே அறிய விரும்புவார்க்குப் பெருந்துணைபுரிவதாகும். ஆகவே, அரசர் வரலாறு உரைக்கும் இங்.ாலின் இறுதிக்கண், அவர் வரலாற்றினே ஒரளவு உணர்த்த எண்ணினேன். - சோர் போசு கிலவியநாடு, பொதுவாகச் சேரநாடு என்ற பெயரான் அழைக்கப் பெறுமாயினும், அது, பிரி வில்லாப் பெருநாடாக என்றும் விளங்கிய தில்லை; சில பல உள் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருநாடாகவே, அது திகழ்ந்து வந்துளது. அத்தகைய உள் நாடுகளுள், கொங்குநாடும் ஒன்று. கோவைமாவட்டமும், சேலம் மாவட்டத்தின் தென்பகுதியும் கொண்டநாடே, பண்டு, கொங்குநாடு என அழைக்கப் பெற்றது. கொங்கர் என்ற ஓரினத்தார் வாழ்ந்தமையால், அந் நாடு, அப் பெயர் பற்றது; கொங்காாவார், சோர், சோழர், பாண்டியர் களைப் போன்றே, தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு மறவர் மரபினராவர்; மறவர் மரபில் வந்த அக் கொங்கர், ஆனிாை போற்றும் அருந்தொழில் மேற்கொண்டு வாழ்ந்து வந்