பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. திரையன் தமிழ்நாடாண்ட பேரரசர் மூவரோடும் ஒருங்கு வைத்து மதிக்கத்தக்க மாண்புடையான் திரையன்; பட்டி னப்பாலே பாடித் திருமாவளவனைப் பாராட்டிப் பதினறு துருயிரம் பொன் பரிசில்பெற்ற பெரும் புலவராய கடிய லுர் உருத்திரங் கண்ணனால் பாராட்டப்பெறும் பெருமை யுடையான் திரையன். திரையன் வெற்றிதரும் வேற். படையுடையான்; வேங்கட நாடாண்ட விழுச்சிறப்புடை யான்; அழியாப்புகழ் உடையான்; அழகிய அணிகலன் அணிந்த ஆண்மையாளன்; பூஞ்சோலை பல சூழ்ந்த பவத் திரி எனும் ஊர் உடையான் எனப் பிற புலவர்களும் இவனேப் பாராட்டியுள்ளனர். வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை.” ' செல்லா நல்லிசைப் பொலம்பூண் திசையன் பல்பூங் கானல் பவத்திரி.” (அகம் : அடு-க.ச0)

  • தொண்டைநாடு சான்ருேர் உடைத்து' என்பதற் கேற்ப, திரையன் ஆண்ட அக்காடு, சிலவளம், நீர்வளம், மக்கள் வளம், மனவளம் ஆய, வளம்பல பெற்ற விழுமிய காடாக விளங்கிற்று. வற்ருதவளம் கிறைந்தநாடு என் பதை விளக்க விரும்புகிருர், திாையனப் பாராட்டிய உருத்திரங்கண்ணனர். தொண்டைநாட்டில், பல்லாண் டிற்கு முன் விளைந்த பண்டங்களும் தின்னப்பெருமல் திாண்டு கிடக்கும். அவ்வுணவுப் பொருள்கள் இட்டு வைக்கப்பெற்ற கூடுகள், ஆண்டுபல ஆகினும் கைவைக்கப் பெருமலே கிடக்கும். கூடுகளில் இட்ட உணவு ஆண்டுபல வாகியும் உண்ணப்பெருது கிடக்க, அக் கூடுகள் மட்டும், ஆண்டுபல ஆயினமையால், அழியும் கில்ேபெற்றுவிடும். கூடுகளின் இவ்வியல்பினேக் கண்ட புலவர், கன்னியராகவே காலத்தைக்கழித்த மகளிரின் அழகு அனுபவிப்பார் இல்லா மலே அழிந்துபோவதால், அவ்வாறு அழகிழந்த கன்னிப் பெண்களைக் குமரிமூத்தார் என அழைக்கப் பெறுதலே