பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கர் 105 ஆனிரை ஒம்பும் அருளுள்ளம் உடையராய கொங்கர், கொற்றம் மிக்க வெற்றி வீ ராகவும் விளங்கினர். வாட் போர்வல்ல வீரராதலோடு, பகைவர்தம் பேரண் களைப் பாழ்படுத்துமாற, பெரும்பெருங் கற்களேத் தாமே எறியவல்ல கல் கால்கவனே எனும் பொறிகளைச் செல்லும் இடங்தோறும் உடன்கொண்டு செல்லும் போர் அறிவும் உடைய ராவர் அக் கொங்கர்; ஒளிறுவாட் கொங்கர்’ (குறுங் க. சுங்), ஆரெயில் அலைத்த கல்கால் கவணை, காரி நறவின் கொங்கர்’ (பதிற்று: அ.அ), எனப் புலவர் கள் கூறுவன அறிக. - இவ்வாறு, ஆனிரைச் செல்வமும், ஆற்றற்பெரு மையும் கொண்ட கொங்கர் வாழும் நாடு, சேரநாட்டின் கிழக்கெல்லைக்கண்ணும், சோழநாட்டின் மேற்கெல்லேக் கண்ணும், பாண்டியநாட்டின் வடமேற்கு எல்லைக் கண்ணும் இருந்தமையால், அக் காடுகளே ஆண்டிருந்த தமிழ்வேந்தர் மூவரும், அக் கொங்கரை வென்று, அவர் நாட்டினே அகப்படுத்திக் கொள்ளும் ஆர்வமிக்கவராயினர். பெருஞ்சோற்றுகியன் சேரலாதன் மகனும், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் உடன் பிறந்தோலும்ாய பல்யானைச் செல்கெழுகுட்டுவன், ஒரு நாட்டை யடுத் துள்ள நிலங்களை வீரர் வழிவந்தார் சிலர் வாழ்விடமாக் கொண்டு வாழவிடல், அங் காட்டிற்குக் கேடாம் எனும் உண்மையுணர்ந்த உரவோணுதலின், அவன், அக் கொங் கரை வென்று, அவர் நாட்டைத் தன்னுட்டோ டிணேத்துக் கொண்டான். அன்று முதல், அக்கொங்கு நாடு, சேர காட்டின் ஒருபகுதியாகவே கருதப்பெறலாயிற்று; சேர வேந்தர்களும், கொங்கு நாட்டுக் கோவேந்தர் எனும் குறி பெறுவாராயினர். பல் யானேச் செல்கெழுகுட்டுவனுக்குப் பிற்பட்டோளுய இளஞ்சோல் இரும்பொறை, "கொங் கர்கோ' என அழைக்கப் பெறுவானுயின்ை. 'ஆ கெழு கொங்கர் நாடகப் படுத்த