பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திரையன் போல், குமரிமூத்த கூடு என அக் கூடுகளுக்குப் பெயர் இட்டுப் பாராட்டியுள்ளார் : - 'ஏணி எய்தா நீள்நெடும் மார்பின், முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின் க கட்டு ஒங்கு நல்லில்.” குமரி மூத்த கூடு ஒங்கு (பெரும்பாண்: உசடு-எ) தொண்டை நாட்டு மக்கள், இயல்பாகவே, நல்லறிவும், நற்பண்பும் உடையராவர். அக் காட்டில் பிறந்த ஆயர்மகள் ஒருத்தியின் உயரிய வாழ்க்கையின்மூலம், அந் நாட்டு மக்கள் இயல்பை யுணர்த்தியுள்ளார் புலவர். புள்ளொலிக்கும் விடியற்காலத்தே எழுந்த ஆயர் மகள், புலி ஒலித்தக்கால் எழும் ஒலிபோல் ஒலி எழத் தயிரைக் கடைந்து, முடித்து, மோரும், நெய்யும்கொண்ட கூடையினைப் பூவால் ஆய சுமையடைமீது வைத்துச் சுமந்து சென்று, விற்று, மோர்விற்ற பணத்திற்கு உணவுப் பொருள்களையும், நெய் விற்ற பணத்திற்குப் பால் கறக்கும் எருமை, பசு, எருமை நாகுகளையும் வாங்கி வருவள். பொன்னணியினும், பால் தரும் பசுவினமே பயன் மிக்கது. என உணர்ந்த அவள், நெய்விற்ற பணத்திற்குப் பொற்காசு வாங்காது, பசு முதலாயின வாங்கிவரும் பண்பினைப் பாராட்டுவோமாக என்னே அவள் மனவளம் ! 'நல்லிருள் விடியல் புள்ளெழப் ப்ோகிப் புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ் உறையமை சீர்தயிர் கலக்கி, நுரை தெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ, * நாள்மோர் மாறும் நன்மா மேனிக் சிறுகுழை துய்ல்வரும் காகின், பணைத்தோள் குறுநெறிக் கொண்ட கூந்தல், ஆய்மகள், அளவிலே உணவிற் கிளையுடன் அருத்தி, நெய்விலக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள், எருமை, எல்லான், கருநாகு பெறுஉம்.” - - (பெரும்பாண் : கடுதி-சுடு)