பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. தொண்டையர் சான்ருேர் உடைத்து” என்ற சீர்சால் சிறப்பினேயுடை பது தொண்டை நாடு. அப் பெயர் பெறுதற்குக் காரணமாய வர் தொண்டையர்; செந்தமிழ் சேர்ந்த பன்னிரு கிலத் துள், அருவா, அருவாவடதலை ஆய இருநாடுகளையும், வேங்கடமலையையும் உள்ளடக்கிய நாடாய்ப் பண்டு கில வியதே, இத்தொண்டையர் வாழ்வால், தொண்டைநாடு எனப் பின்னர் வழங்கப்பெற்றது. தொண்டையர், வேங். கடமலையைச் சார்ந்துள்ள காட்டினேக் காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தவராவர்; வேங்கடமலையில் வேட்டையாடிப் பெற்ற யானேகளால் ஆய பெரிய படையுடையவர்; அக் களிற்றுப் படையோடு, வளம் மிக்க கேர்ப்படையும் உடைய ாதலின், பகையரசர் காடுகளே வென்று அடிப்படுத்து, ஆண்டுப்பெற்ற பயன் கொண்டு வாழும் விழுமிய வாழ்வு டையவர்; பகைவர்தம் போாண்களே அழித்து, ஆங்கு, வாழ் அப்பகையரசர்தம் முடிகளைக் கைப்பற்றி வெற்றிப். புகழ் கொள்வதை விடுத்து, பகைவர் பணிந்து திறை தர முன் வருவராயினும் பகைதணிந்து போதலை விரும்பா வீர முடையோராவர் : வினாவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரும் நெடுங்கோட்டு ஒங்கு வெள்ளருவி வேங்கடம்.” (அகம் : உகக.) பொருவார் . மண்னெடுத் துண்ணும், அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்.” (குறுங் : உசுo), "பகைவர் சடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றியல்லது, வினையுடம் படினும் ஒன்றல் செல்லா, உாவுவாள் தடக்கைக்