பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூழியர் 119. இருந்து உயர்வுற்றது. பல்யானைச்செல்கெழு குட்டுவன் 'பூழியர் கோவே' (பதிற்று : உக) எனவும், செல்வக் கடுங்கோ வாழியாதன் பூழியர் பெருமகன்’ (புறம்: கடஅஎ) எனவும், தகர்ே எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பூழியர் மெய்ம்மறை” (பதிற்று: எங்) எனவும், இளஞ் ச்ோல் இரும்பொறை 'பூழியர்கோவே பொலந்தேர்ப் பொறைய’ (பதிற்று: அச) எனவும், பூழியர் மெய்ம் மறை” (பதிற்று : சுo) எனவும் புலவர் பெருமக்களாற் பெயரிட்டுப் பாராட்டப்பெறுதல் காண்க. இவ்வாறு பண்டுதொட்டே சோர்க்குரியதாய்ச் சிறப் புற்ற பூழிநாடு, இடையில் சிலநாள், அவர் பகைவர் கைப் பட்டுப் பாழுற்றது ; களங்காய்க்கண்ணி நார்முடிச் சோல் எனும் சேரவேந்தன் கனி இளையணுய் இருந்த காலத்தே, சோர்க்குரிய பூழிநாட்டைச் சேரர் பகைவனய நன்னன் என்பான் கவர்ந்துகொண்டான் ; கார்முடிச் சோல் அரி யணே ஏறியதும், நன்னன் ஆண்டிருந்த அப் பூழிநாட்டின் மீது படை யெடுத்துச்சென்று, கடம்பின் பெருவாயில், வாகைப்பெருந்துறை என்னும் இடங்களில், அந் நன்ன ளுேடு கடும்போர் ஆற்றி, அவன் காவல் மாமாம் வாகை மாத்தினை வெட்டி வீழ்த்தி, அவனேயும் வென்று, அவன் பண்டு கவர்ந்துகொண்ட தன் பூழிநாட்டையும் பெற்று மீண்டான். 'பூழி நாட்டைப் படையெடுத்துக் கழிஇ உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச்செருவி னற்றலே யறுத்தவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து.” . . . . - - - (பதிற்று : பதிகம்: ச) 'இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் - பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றம் கந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல்