பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. மழவர் சோழர் பேராசின் தலைநகர்களுள் ஒன்ருய உறை யூர்க்கு மேற்கே, காவிரி யாற்றிற்கு வடக்கே கொங்கு நாட்டை அடுத்திருந்த ஒரு சிறு கிலப் பகுதி மழநாடு எனவும், மழகொங்கம் எனவும் பெயர்கொண்டு கிலவி யிருந்தது ; அக் காட்டில் வாழ்ந்த வீரர் மழவர் எனும் பயருடையராவர் ; மழவர், விரைந்து செல்லும் குதிரைப் படை உடையவர் எனக் கூறுவர் புலவர் மாமூலனர் : " வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண்கழல் உருவக் குதிாை மழவர்.” (அகம்: ) ' கறுத்தோர் தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்.” (அகம்: க.அஎ) மழவர், இவ்வாறு பகைவர் படைகளைப் பாழாக்க வல்ல பெரும்படை உடைமையால், தம் அண்டை நாடு களுட் புகுந்த அந் நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்துவரும் களவுவாழ்க்கையினே விரும்பி மேற்கொண்டிருந்தனர் ; செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பேபோல், சுருண்டு சுருண்டு, பிடரி மறையத் தொங்கும் தலைமயிரையும், சிவந்த கண்களையும் உடைய அம் மழவர், தம் காலில் இட்ட செருப்புக்கள் தேயச் சேனெடுக் தாரம் சென்று, தம்மை எதிர்ப்பாரை வாளால் வெட்டி வீழ்த்தியும், அம்பேவிக் கொன்றும் அழித்துவிட்டு அவர்தம் ஆனிரை களைக் கவர்ந்து மீள்வர்; இடைவழியில், நெடுந்துாரம் கடந்து வருதலின், கடை ஒய்ந்து கின்று விட்ட கன்று களின் கண்ணிர் கண்டும் கலங்கார்; அவ்வாறு கவர்ந்து வந்த அவ் வானிரையுள் தாம் விரும்பும் கொழுத்த ஆவினே, தம் வழிபடு தெய்வத்தின் முன் கிறுத்திக் கொன்று, அதன் உதிரத்தைத் துளவிப் பலியிட்டு எஞ்சிய புலாலைப் புழுக்கி உண்பர். - - -