பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. வடுகர் வடுகர் தமிழகத்தைச் சேர்ந்தவரல்லர்; தமிழகத்தின் எல்லைக்கண் வாழ்ந்தவர்; பொருள் தேடிப் புறநாடு போகும் தமிழர், இவர் பண்பெலாம் உணர்ந்துள்ளனர். ஆகவே, அவர் குறித்தும் ஈண்டுக் கூறுதல் அமைவுடைத்தாம்; வடுகர் தேயம், புல்லி எனும் பெயருடையாயை கள்வர் குலத்தலைவன் இருந்து ஆளும் வேங்கடமலைக்கு அப்பால் உள்ளது; வேற்றுமொழி வழங்குவது; அந்நாட்டில், தமி ழகத்து எல்லையை ஒட்டி அமைந்திருந்த காடு, கட்டி என்பானுக்குரிய நல்லநாடு. இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஒங்கு வெள்ளருவி வேங்கடத்தும்பர் வால் எனப் புகவின் வடுகர் தேஎம்” (அகம் : உகங்) புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து கடையரும் கானம் விலங்கி, கோன்சிலேத் தொடையமை பகழித் துவன்றுகிலே வடுகர் பிழியார் மகிழர் கவிசிறந்து ஆர்க்கும் - மொழிபெயர் தேஎம்.” * . (அகம் : உகடு) வடுகர் முனையது - பல்வேற் கட்டி கன்னட்டு உம்பர் மொழிபெயர் தேஎம். (குறுங் : க.க) வடுகர், தமக்குத் துணையாக வன்மைமிக்க காய்களை என்றும் உடன்கொண்டு கிரிவர்; கடிய ஒலிக்கும் பம்பை எனும் பறையுடையர், கள்ளுண்டு களிக்கும் கருத்துடை யர்; காட்டில் மயில் கழித்துப்போட்ட தோகையை, வார் கொண்டு வலித்த தம் வில்லில் வைத்துக் கட்டி, வலிய அவ் வில்லின் காணுேசைக்கொப்ப, விரைந்து ஒலித்துப் பாயும்