பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. வேளிர் ஆய் அண்டிரன், பறம்புமலைப் பாரி, வையாவிக் கோப் பெரும் பேகன் முதலாய வள்ளல்களும், நெடுவேள் ஆவி, நீர்ேக் கிழவன் எவ்வி, நன்னன் வேண்மான், வெளியன் வேண்மான், பிடவூர் வேண்மான், நெடுவேளாதன், இள விச்சிக்கோ, இருங்கோவேள் முதலாம் பெரு வீரர்களும், நாங்கூர்வேள், அழுந்துார் வேள், மையூர்கிழான் வேண்மான் முதலாம் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடை அளிக்கும் மாண்புடையாரும், அழும்பில்வேள்போலும் படைத் தலை வரும் பிறந்த பெருமையுடையது வேளிர்குடி; இவர் களே யல்லாமல், இடையர் குலத்தலைவன் கழுவுள் என்பானே வென்ற பதின்ைகு வேளிரையும், வெண்ணி வாயில் எனுமிடத்தே, கரிகாற் பெருவளத்தானே எதிர்த் துப் போரிட்ட பதினெரு வேளிரையும் பெற்றளித்த பெருமையும் அவ் வேளிர் குடிக்கே உரித்து. தொல்காப்பியப் பாயிர வுரையில், ஆசிரியர் நச்சினர்க் கினியர், தேவரெல்லாம் கூடி, யாம் சேர இருத்தலின், மேருத் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது; இதற்கு அகத் கியனரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென் திசைக்கட் போதுகின்றவர்........ துவராபதிப் போந்து கிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண் குடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்தனர்” எனக் கூறியதையும், - : நீயே, வடபால் முனிவன் தடவினுட் டோன்றிச் செம்புபுனைக் கியற்றிய சேனெடும் புரிசை உவாா வீகைத் துவாை யாண்டு