பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தொண்டைமான் "சான்ருேர் உடைத்து” என்ற சிறப்புடையது தொண்டைநாடு, ஆமூர், இளங்காடு, ஈக்காடு, ஈத்தார், ஊற். மறுக்காடு, எயில், கடிகை, கலியூர், களத்துனர், குன்றபத் திரம், சிறுகரை, செங்காடு, செந்திருக்கை, செம்பூர், தாமல், பஆேர், பல்குன்றம், புலால், புலியூர், பேயூர், மன ஆர், வெண்குன்றம், வேங்கடம், வேலூர் முதலாய இருபத்து நான்கு கோட்டங்களைக் கொண்டது எனக் கூறப்படும் தொண்டை நாடு, அருவா, அருவாவடதலை ஆய இருகாடு களையும், வேங்கடமலையையும் உள்ளடக்கிய நாடாகப் பண்டு இருந்தது. கொண்டையர் வாழ்ந்ததால், அங்காடு, தொண்டை நாடு எனப் பெயர் பெற்றது. தொண்டையர், வேங்கடமலையில் வேட்டையாடிக் கொண்ட யானைகளா லாய பெரிய படையுடையவர். அப் படை யுடைமையால், பகைவர் நாடுகளை வென்று ஆண்டுத் தாம்கொண்ட பொருள்கொண்டு வாழும் வாழ்க்கை யுடையவர். பகைவர் போாண்களே அழித்து, அப் பகைவர் தம் முடிகளைக் கைப்பற்றி வெற்றிப்புகழ் கொள்வதை விடுத்து, அப் பகைவ ரோடு பகை தணிந்து போதலை விரும்பா வீரம் உடையவர். 'வினோவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஒங்குவெள் ளருவி வேங்கடம்’ (அகம்: உகக.) 'பொருவார் மண்ணெடுத் துண்னும், அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்' (குறுங்: உசுo) 'பகைவர் . . . . X கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது, வினையுடம் படினும் ஒன்றல் செல்லா, உரவுவாள் தடக்கைக் கொண்டி உண்டித் தொண்டையோர்.” - (பெரும்பாண்: சடுo-டுச)