பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங். நன்னன்சேய் நன்னன் "சான்ருேர் உடைத்து” எனும் உயர் புகழ்கொண்ட தொண்டை நாட்டின் பெரும்பிரிவாகிய இருபத்து நான்கு கோட்டங்களுள், பல்குன்றக் கோட்டம் என்பதும் ஒன்று; குன்றுகள் பலவற்றைத் தன்பாற் கொண்டிருத்தலின் இக் கோட்டம் அப் பெயர் பெற்றது; மலைபடுகடாம் பாடிய புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றார்ப் பெருங்கெளசிகனர், குன்றுசூழ் இருக்கை நாடு” (மலே படுகடாம்: டு.அங்) எனப் பெயரிட்டு அழைப்பர். வடார்க் காடு, தென்னுர்க்காடு, சேலம் மாவட்டங்களின் ஒன்று கூடும் இடமாகத் திருவண்ணுமலைக்கு மேற்றிசைக்கண் உள்ள இவ்வூர், வடார்க்காடு மாவட்டம், செங்கம் வட்டத் தின் தலைநகராய் இன்று திகழ்கிறது; செங்கண்மா, செங் கமா, செங்கம் என்றெல்லாம் இக் காலத்தே வழங்கப் பெறும் அவ்வூர், போாசின் தலைநகராம் பெருமையினேப் பண்டு பெற்றிருந்தது என்பதைக் காட்டும், அழிந்த அகழி, இடிந்த கோட்டை முதலாயினவற்றை இன்றும் கொண்டுளது. பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாவில் இருந்து அரசாண்டான் நன்னன் சேய் நன்னன் எனும் வேளிர் குலத்தான் ஒருவன்; இவன் வேளிர் வழிவந்தவன் என் பது, வேள்’ ‘மான விறல்வேள்” என மலைபடுகடாத்தில் (சுச, கசு ச) அவன் அழைக்கப் பெறுதலால் உணரலாம்; நன்னன்சேய் நன்னன் என அழைக்கப்பெறும், இந் நன்னனின் தந்தையாய நன்னன், யாவன் என்பது குறித்து ஆராய்ச்சியாளரிடையே ஒருமைப்பாடு உண்டாக வில்லை. ன்ைனன் சேய் கன்னனுக்குரிய மலைநாடு ஏழிற் குன்றம் எனவும் வழங்கப்பெறும்; அஃது ஏழு மலைப்பகுதி களைக் கொண்டிருந்தமையால், அப் பெயர் பெற்றதாகத் தெரிகிறது; பல்குன்றக் கோட்டம் எனும் பெயர் வழக்