பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திரையன் னன் உதியன் அருங்கடிப்பாழி’ என்ற தொடரானும் (அகம்: உடு.அ) நன்னன் ஏற்றை” எனத் தொடங்கும். அகப்பாட்டானும் (சசி) அறியலாம்; என்று கருதுவாரும் உளர். மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம் இரண்டிலும், 'மான விறல்வேள்” என, உளதே யல்லால், வானவன் வெற்றிக் குரிய வேள் எனப் பொருள்தரும் வானவிறல்வேள்” எனக் காணப்படவில்லை; விளங்கு பெருந்திருவின் மான விறல்வேள் அழும்பில் அன்ன நாடிழந் தணரும்' (மதுரை. உசச-டு) நோனுச் செருவின் வலம்படு கோன்ருள், மான விறல்வேள் வயிரியம் எனினே' (மலை படு: கசுங்-சுச). மதுரைக் காஞ்சி உரையாசிரியர், அத் தொடர்க்கு விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மானவிறல் வேள் என்னும் குறுகில மன்னனுடைய அழும் பில் என்னும் ஊரையொத்த நாடுகளே இழந்தவர்களும்’ என்று உரை கூறுவதால், மதுரைக்காஞ்சித் தலைவனுல் நாடிழந்தவன் மாணவிறல் வேள் அல்லன்; இழந்ததும் அழும்பில் அன்று; அழும்பில் போலும் வளம்கிறைந்த பிற நாடுகளே எனப் பெறப்படும்; இவ்வாறு கொள்ளாது, மானவிறல் வேளாகிய அழும்பில் என்பானைப்போல் நாடி ழந்தவரும் எனப் பொருள் கொள்வதாயின் அழும்பில் வேள், நெடுஞ்செழியனுல் நாடிழந்தவனுதல் வேண்டும்; செங்குட்டுவன் படைத்தலைவருள் ஒருவன் எனக் கூறப் பெறும் அழும்பில் வேள், நெடுஞ்செழியனெடு போரிட்டுத் தோற்ருன் எனச் சிலப்பதிகாரம் உணர்த்தவில்லை. ஆகவே, மதுரைக்காஞ்சித் தொடரான் உணர்த்தப்படு வோன், சோன் படை முதலியாகான்; அவன் சேரன் படை முதலியாகான் எனவே, மானவிறல்வேள் எனும் தொடர், சோன் படைத்தலைவன் எனும் பொருளுடையது ஆகாது; ஆகவே, மானவிறல் வேள் எனும் தொடர் ஒன்றையே கொண்டு, நன்னன்சேய் நன்னனைச் சேரன் படைமுதலி எனக் கோடல் பொருந்தாது; மலைபடுகடாத்தைப் படித் தார், அப் பாட்டைப் பெறும் பெரும்பேறு பெற்ற கன்